Published : 18 Jun 2015 12:42 PM
Last Updated : 18 Jun 2015 12:42 PM
மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் 3-ல் உலவுவது விசேஷமாகும். துணிவோடும் தன்னம்பிக்கையோடும் எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும். மனோபயம் விலகும். அரசாங்கத்தாரால் அனுகூலம் ஏற்படும். விளையாட்டுகளில் வெற்றி கிட்டும். நல்லவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும்.
சொத்துகளால் வருவாயும் கிடைத்து வரும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். பெண்களுக்கு உற்சாகம் பெருகும். பிள்ளைகள் நலம் சீராகும். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத ஓர் அதிர்ஷ்ட வாய்ப்புக் கூடிவரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 18, 23.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு, புகை நிறம், இளநீலம், வெண்மை, பச்சை.
எண்கள்: 1, 4, 5, 6, 9.
பரிகாரம்:
சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 3-லும், கேது 11-லும் உலவுவது சிறப்பு. முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். மன உற்சாகம் கூடும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். 2-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் வேகத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பிறர் மனம் புண்படும்படியான வார்த்தைகளைப் பேச வேண்டாம்.
குடும்ப நலனில் கவனம் தேவை. 3-ல் குருவும், 5-ல் ராகுவும் இருப்பதால் பிள்ளைகள் நலனில் கவனம் தேவை. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட துறைகளில் விழிப்புடன் ஈடுபட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வாரப் பின்பகுதியில் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 18, 23.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்:
அங்காரகன், முருகனை வழிபடுவது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவதால் குடும்பத்தில் குதூகலம் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். நல்லவர்களும் வல்லவர்களும் ஆதரவாக இருப்பார்கள். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். பேச்சில் திறமை வெளிப்படும். இனிமையான சுபாவம் காரணமாக நலம் பெறுவீர்கள். முகப்பொலிவு கூடும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும். பெண்களால் அனுகூலம் உண்டாகும்.
ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மதபோதகர்கள், உத்தியோகஸ்தர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். ஜன்ம ராசியில் சூரியனும் செவ்வாயும், 4-ல் ராகுவும், 12-ல் புதனும் இருப்பதால் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரிகள் அகலக் கால் வைக்கலாகாது. எக்காரியத்திலும் பதற்றம் வேண்டாம். நிதானமாக யோசித்து ஈடுபடுவது அவசியம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 18, 23.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: பொன் நிறம், வான்நீலம், மெரூன்.
எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்:
விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதும் கேட்பதும் நல்லது. ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் ராகுவும், 11-ல் புதனும் உலவுவதால் வசீகரச் சக்தி கூடும். பொருள்வரவு அதிகரிக்கும். கலைத்துறையினருக்குப் புகழும் பொருளும் சேரும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டாளிகள் உதவுவார்கள். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.
வியாபாரம் லாபம் தரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 12-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். தந்தை, உடன்பிறந்தவர்கள், அரசாங்கத்தினரால் செலவுகள் ஏற்படுவதுடன் பிரச்சினைகளும் உண்டாகும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. சொத்துகள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியம்.
அதிர்ஷ்டமான தேதி: ஜூன் 23.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பச்சை.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்:
சூரியன், செவ்வாய்க்கு அர்ச்சனை செய்வது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சூரியன் செவ்வாயுடன் கூடி 11-ல் உலவுவது விசேஷமாகும். புதன், சுக்கிரன், சனியின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால், அரசு சம்பந்தமான காரியங்கள் எளிதில் நிறைவேறும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உதவுவார்கள். அரசியல்வாதிகளுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். தீ, மின்சாரம், ஆயுதங்கள், வெடிப்பொருட்கள், கட்டிடப்பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். வீட்டுக்குத் தேவையான பொருட்களின் சேர்க்கை நிகழும். நல்ல இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்படும் என்றாலும் சமாளிப்பீர்கள். பெற்றோரால் நலம் கூடும். முன்னோர்கள் சொத்துகள் சிலருக்கு இப்போது கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 18, 23.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு.
நிறங்கள்: இளநீலம், சிவப்பு, பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்:
ராகு, கேதுவுக்காக துர்கை, விநாயகரைத் தொடர்ந்து வழிபடுவது அவசியம்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், செவ்வாய் ஆகியோரும் 11-ல் குருவும் சுக்கிரனும் உலவுவது விசேஷமாகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அரசாங்கப் பணிகள் நிறைவேறும். முக்கியஸ்தர்களது சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் ஆகிய துறைகளில் உள்ளவர்களுக்கு ஆக்கம் தரும். உடன்பிறந்தவர்கள், பிள்ளைகள், தந்தையால் அனுகூலம் ஏற்படும்.
நிலபுலங்களின் சேர்க்கை நிகழும். பிரச்சினைகள் எளிதில் தீரும். வழக்குகளிலும்; போட்டிய் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். கலைஞர்களுக்கும் பெண்களுக்கும் உற்சாகமான போக்கு நிலவிவரும். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகினால் வெற்றி வாய்ப்புகள் கூடப் பெறலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 18, 21 (முற்பகல்).
திசைகள்: கிழக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, நீலம், பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 6, 9.
பரிகாரம்:
சர்ப்பேஸ்வரரை வழிபடவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT