Published : 09 Jun 2016 11:08 AM
Last Updated : 09 Jun 2016 11:08 AM
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் சுக்கிரனும், 11-ல் குருவும் ராகுவும் உலவுவது சிறப்பு. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். தொழில் முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் நிலை உயரப் பெறுவார்கள். பொருளாதார நிலை திருப்தி தரும்.
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். பிள்ளைகளால் நலம் உண்டாகும். பயணம் சார்ந்த இனங்களால் வருவாய் கூடும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கலைத்துறை ஊக்கம் தரும்.
13-ம் தேதி முதல் சுக்கிரன் 9-ம் இடம் மாறுவது நல்லது. தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். 15-ம் தேதி முதல் சூரியன் 9-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. தந்தை நலனில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 9, 11, 15 (பிற்பகல்).
திசைகள்: வட கிழக்கு, தென் கிழக்கு, வடக்கு, தென் மேற்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், பொன் நிறம், இள நீலம், பச்சை.
எண்கள்: 3, 4, 5, 6.
பரிகாரம்: ஆதித்தனை வழிபடவும். விநாயகருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் ராகு உலவுவது மட்டுமே அனுகூலமாகும். சந்திரன் இந்த வாரம் சிறப்பாக உலவுகிறார். இதர கிரக நிலை சிறப்பாக இல்லாததால் எதிலும் விசேஷமான நன்மைகளை எதிர்பார்க்க இயலாது.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நல்லவர்களின் நட்புறவை வளர்த்துக்கொண்டு, அவர்களது ஆலோசனைகளின்படி செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது.
13-ம் தேதி முதல் சுக்கிரன் 8-ம் இடம் மாறுவதால் கலைஞர்களுக்கு மந்த நிலை விலகும். 15-ம் தேதி முதல் சூரியன் 8-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. அரசுப் பணிகளில் விழிப்புத் தேவை. தொழில் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 9, 14, 15 (முற்பகல்).
திசைகள்: தென் மேற்கு, வட மேற்கு.
நிறங்கள்: வெண்மை, வெண்சாம்பல் நிறம்.
எண்கள்: 2, 4, 6.
பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபடுவது நல்லது. கோளறு திருப்பதிகம் வாசிக்கவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் சூரியனும்; புதனும் 9-ல் குருவும் உலவுவது சிறப்பு. வார ஆரம்பம் சாதாரணமாகவே இருக்கும். பெண்களாலும் வாழ்க்கைத் துணைவியாலும் சங்கடம் ஏற்படும். கலைத் துறையினருக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும். கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது. வாரப் பின்பகுதியில் நல்ல திருப்பம் உண்டாகும்.
முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். செய்துவரும் தொழில் விருத்தி அடையும். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். பிறருக்கு தாராளமாக உதவுவீர்கள். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் தொழில் லாபம் தரும். 13-ம் தேதி முதல் சுக்கிரனும், 15-ம் தேதி முதல் சூரியனும் 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. வாழ்க்கைத் துணைவராலும், தொழில் பங்குதாரர்களாலும் சங்கடம் உண்டாகும். பக்குவமாகச் சமாளிக்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 11, 14, 15.
திசைகள்: வட மேற்கு, கிழக்கு, வடக்கு, வட கிழக்கு.
நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு , பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 7.
பரிகாரம்: மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திரம் சொல்வது நல்லது. ஏழைப் பெண்களுக்கு உதவவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 11-ல் செவ்வாயும் சனியும் உலவுவது சிறப்பு. வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். கலைத் துறையினருக்கு சுபிட்சம் கூடும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.
இயந்திரப் பணிகள் லாபம் தரும். 5-ல் சூரியனும், 8-ல் குருவும் இருப்பதால் பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். மனதில் ஏதேனும் சலனம் உண்டாகும். 13-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. எக்காரியத்திலும் யோசித்து ஈடுபடுவது நல்லது. வாழ்க்கைத் துணை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
15-ம் தேதி முதல் சூரியன் 6-ம் இடம் மாறுவது விசேஷம். முக்கியஸ்தர்களது சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புதிய பதவி, பட்டங்கள், பொறுப்புகள் தேடிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 9, 15.
திசைகள்: மேற்கு, தென் கிழக்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை. பச்சை.
எண்கள்: 5, 6, 8, 9.
பரிகாரம்: துர்கா பூஜை செய்வது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் சுக்கிரனும், 7-ல் குருவும், 10-ல் செவ்வாயும் சனியும் சஞ்சரிப்பதால் எதிர்ப்புகளை வெல்வீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும்.
திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டும். கேளிக்கை, உல்லாசங்களிலும் விருந்து உபசாரங் களிலும் ஈடுபாடு உண்டாகும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் அனுகூலமான திருப்பமோ, வெற்றியோ கிடைக்கும். 13-ம் தேதி முதல் சுக்கிரன் 5-ம் இடம் மாறுவதால் மனமகிழ்ச்சி பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். 15-ம் தேதி முதல் சூரியன் 5-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. எக்காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 9, 15 (பிற்பகல்).
திசைகள்: மேற்கு, தெற்கு, தென் கிழக்கு, வடக்கு, வட கிழக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8, 9.
பரிகாரம்: துர்கை, விநாயகருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. சந்திரனும் சாதகமாக உலவுகிறார். இதனால் முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். அரசியல், நிர்வாகம், கலை, பயணம் சார்ந்த இனங்களால் வருவாய் கிடைத்து வரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். பிற மொழி, மத, இனக்காரர்களால் அனுகூலம் ஏற்படும்.
13-ம் தேதி முதல் சுக்கிரன் 4-ம் இடம் மாறுவதால் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். வாகனச் சேர்க்கையும், வாகனத்தால் ஆதாயமும் கிடைக்கும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள் சேரும். 15-ம் தேதி முதல் சூரியன் 4-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. இதயம், நுரையீரல் சம்பந்தமான உபாதைகள் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்கள், வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்:
ஜூன் 9, 14, 15 (காலை).
திசைகள்: கிழக்கு, தென் கிழக்கு, தென் மேற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, வெண்மை, இள நீலம், புகை நிறம்.
எண்கள்: 1, 4, 6.
பரிகாரம்: புதன், குருவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. மகாவிஷ்ணு, சிவபெருமானை வழிபடவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT