Published : 01 Sep 2016 11:46 AM
Last Updated : 01 Sep 2016 11:46 AM
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 11-ல் சூரியன், புதன், ராகு ஆகியோரும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். வார முன்பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த எண்ணம் இனிதே நிறைவேறும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத் துறைகள் லாபம் தரும். காடு, மலை, வனாந்தரங்களில் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வார நடுப்பகுதியில் சுபச்செலவுகள் இருக்கும். வாழ்க்கை வசதிகள் பெருகும். வாரப் பின்பகுதியில் தொழில்ரீதியாக நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான போக்கு தென்படும். 2-ல் செவ்வாயும் சனியும் 5-ல் கேதுவும் இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 1, 5.
திசைகள்: வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை, இளநீலம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 4, 5, 6.
பரிகாரம்: குருவையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் புதனும் ராகுவும் 11-ல் குருவும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். புதிய பதவி, பட்டங்கள் பெறுவீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். அரசால் உதவி கிடைக்கும். நிர்வாகத் திறமை வெளிப்படும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர், நவீன விஞ்ஞானத் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், வியாபாரிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தரகர்கள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். வாழ்க்கைத் துணைவராலும் மக்களாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 1, 4.
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, வெண்சாம்பல் நிறம், பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.
பரிகாரம்: ஜன்மச்சனிக்குப் பிரீதியாக நல்லெண்ணெய் தீபமேற்றவும். ஆஞ்சநேயரை வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேது உலவுவது நல்லது. 9-ல் இருக்கும் சூரியனும் நலம் புரிவார். தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு அனுகூலமான போக்கு தென்படும். செய்தொழிலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் முளைக்கும். விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் சிலருக்கு ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். நெருங்கிய நண்பர்கள் ஓரளவு உதவுவார்கள். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்னைகள் சூழும். இயந்திரப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள், பயணம் சார்ந்தவர்களுக்கு சங்கடங்கள் ஏற்படும். மக்களாலும், உடன்பிறந்தவர்களாலும் வேலையாட்களாலும் தொல்லைகள் சூழும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 1, 4, 5.
திசைகள்: வடமேற்கு, கிழக்கு.
நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு.
எண்கள்: 1, 7.
பரிகாரம்: குரு, சுக்கிரனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 9-ல் குருவும் சுக்கிரனும் 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவதால் புத்திசாலித்தனம் பளிச்சிடும். வியாபாரம் பெருகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கலைஞர்களது நிலை உயரும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆன்மிகவாதிகளுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். மக்களாலும் பேரன், பேத்திகளாலும் அனுகூலம் உண்டாகும். செய்தொழில் விருத்தி அடையும். புதிய முயற்சிகள் கைகூடும். 8-ல் சூரியன், ராகு ஆகியோர் உலவுவதால் உஷ்ணாதிக்கம் கூடும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். அரசு விவகாரங்களில் விழிப்பு தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 4, 5, 6.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, தெற்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8, 9.
பரிகாரம்: சூரியன், ராகு ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் சனியும் உலவுவது சிறப்பாகும். செய்தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். இயந்திரங்கள், எரிபொருட்கள், கட்டிடப் பொருட்கள், தாதுப் பொருட்கள் ஆகியவை லாபம் தரும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உழைப்பு வீண்போகாது. கலைத் துறையினருக்கு அளவோடு நலம் உண்டாகும். 7-ல் சூரியன், புதன், ராகு ஆகியோர் இருப்பதால் வாழ்க்கைத் துணைவரிடமும் தொழில் கூட்டாளிகளிடமும் பக்குவமாகப் பழகுவது நல்லது. பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. குரு 8-ல் இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. குடும்ப நலனிலும் மக்கள் நலனிலும் அக்கறை தேவை. உத்தியோகஸ்தர்களும் ஆசிரியர்களும் பொறுப்புடன் காரியமாற்றினால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 5, 6.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம்.
எண்கள்: 6, 8, 9.
பரிகாரம்: குருவுக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்யவும். நாகரை வழிபடவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காணலாம். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். அரசாங்கப் பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். பயணத்தால் நலம் உண்டாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். வாரப் பின்பகுதியில் மக்களால் இடர்ப்பாடுகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 1, 4.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 4, 5, 9.
பரிகாரம்: சூக்தம், லட்சுமி அஷ்டகம் படிப்பதும் கேட்பதும் நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT