Published : 06 Nov 2014 12:11 PM
Last Updated : 06 Nov 2014 12:11 PM

வார ராசிபலன் 6-11-2014 முதல் 12-11-2014 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலா ராசிக்காரர்களே

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே உலவுவது சிறப்பாகும். 3-ல் செவ்வாயும் 6-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நண்பர்கள் தக்க தருணத்தில் முன்வந்து உதவுவார்கள். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். இயந்திரப் பணிகள் லாபம் தரும். நிலம், மனை, போன்ற சொத்துக்கள் சேரும்.

மனத்தில் துணிவு பிறக்கும். எதிரிகள் அடங்கி இருப்பார்கள். போட்டிகளிலும் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். வாரப் பின்பகுதியில் தர்ம காரியங்களிலும் தெய்வ காரியங்களிலும் ஈடுபாடு கூடும். கலைஞர்கள், மாதர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். சுகானுபவம் உண்டாகும். 12-ல் ராகு இருப்பதால் பயணத்தின்போது விழிப்புத் தேவை. கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 6, 10, 12..

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: சிவப்பு, மெரூன், வெண்மை, வான் நீலம்.

எண்கள்: 6, 7, 9.

பரிகாரம்: சூரியன், ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. ராகு காலத்தில் துர்கைக்கு பசும் நெய் விளக்கேற்றி, துர்கா கவசம் படிப்பது சிறப்பாகும்.



விருச்சிக ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் ,குருவும் 11-ல் ராகுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புக்களின் வலு குறையும். காரியத்தில் வெற்றி கிட்டும். பண நடமாட்டம் திருப்தி தரும். பெரியவர்கள், தனவந்தர்களது ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்வில் முன்னேற்றத்துக்கான வாய்ப்புக்கள் கூடிவரும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்களது தொடர்பு பயன்படும். வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள்.

கலைத்துறை ஊக்கம் தரும். மாதர்கள் நோக்கம் நிறைவேறும். மக்களால் ஓரிரு நன்மைகள் உண்டாகும். பயணம் பயன்படும். வழக்கில் அனுகூலமான திருப்பம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் சந்திரன் 8-ஆமிடத்தில் உலவும் நிலை அமைவதால் எக்காரியத்திலும் நிதானமாக ஈடுபடுவது நல்லது. குடும்ப நலனில் அக்கறை தேவை. தந்தையால் சிறு சங்கடம் ஏற்படும். அரசியல், நிர்வாகம், வியாபாரம், போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் சரிவைத் தவிர்க்கலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,நவம்பர் 6, 9.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு..

நிறங்கள்: பொன் நிறம், வெண்சாம்பல் நிறம், இளநீலம்.

எண்கள்: 3, 4, 6.

பரிகாரம்: சூரியன், சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யவும்.



தனுசு ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் ராகு 11-ல் சூரியன், புதன், சுக்கிரன், சனி ஆகியோரும் சஞ்சரிப்பதால் மனத்தில் உற்சாகம் பெருகும். நல்ல எண்ணங்கள் உருவாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். புதியவர்கள் உங்களுக்கு நண்பர்கள் ஆவார்கள். அவர்களால் அனுகூலமும் உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். சுகானுபவம் கூடும். எதிரிகள் அடங்குவார்கள்.

தொழில் நுட்பத்திறமை வெளிப்படும். பயணத்தால் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். தந்தையாலும், உற்றார், உறவினர்களாலும் நலமுண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கூட்டாளிகளால் நலம் உண்டாகும். ஜன்ம ராசியில் செவ்வாயும் 4-ல் கேதுவும், 8-ல் குருவும் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. கோபத்தைக் குறைத்துக்கொள்ளவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 6, 9, 10, 12 (முற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, நீலம், பச்சை, புகை நிறம், இளநீலம், வெண்மை.

எண்கள்: 1, 4, 5, 6, 8.

பரிகாரம்: குரு, கேது, செவ்வாய் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. பெரியவர்களையும், வேதம் படித்தவர்களையும் வணங்கி அவர்களது நல்வாழ்த்துக்களைப் பெறவும். விநாயகருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.



மகர ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 7-ல் குருவும், 10-ல் சூரியனும் புதனும் சுக்கிரனும் சனியும் உலவுவதால் நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சுக, செளக்கியம் கூடும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். பதவி, பட்டங்கள் கிடைக்கும். சுப காரியங்கள் நிகழும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பண வரவு திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும்.

அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வியாபாரம் பெருகும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். நல்ல இடமாற்றமும் ஊதிய உயர்வும் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களில் ஈடுபடவும் அதனால் வருவாய் கூடப் பெறவும் வாய்ப்பு உண்டு. 12-ல் செவ்வாய் இருப்பதால் வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. சகோதர நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். இயந்திரப் பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்:,நவம்பர் 6, 9, 10, 12.

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம்..மெரூன்.

எண்கள்: 1, 3, 5, 6, 7, 8..

பரிகாரம்: செவ்வாய்க்குப் பிரீதியாக திருமுருகனை வழிபடவும். உடன்பிறந்தவர்களுக்கு உதவி செய்யவும்.



கும்ப ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். செயலில் வேகம் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டி, பந்தயங்களிலும் விளையாட்டு விநோதங்களிலும் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். செந்நிறப் பொருட்கள் லாபம் தரும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறையினருக்கு சுபிட்சம் உண்டாகும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வழக்கில் சாதகமான போக்கு தென்படும். 2-ல் கேதுவும், 6-ல் குருவும், 8-ல் ராகுவும் இருப்பதால் குடும்ப நலனில் அக்கறை தேவை. புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் கூடாது. கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. பயணம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புத் தேவை. ஏற்றுமதி-இறக்குமதி இனங்களைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,நவம்பர் 6, 9, 10, 12..

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு, பச்சை.

எண்கள்: 5, 6, 8, 9 .

பரிகாரம்: நாகர் வழிபாடு அவசியமாகும். நவக்கிரகங்களில் குருவுக்கு வியாழக்கிழமைதோறும் பசும்நெய்விளக்கேற்றி வழிபடவும்.



மீன ராசிக்காரர்களே

உங்கள் ராசிநாதன் குரு வலுத்திருக்கிறார். செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் குடும்ப நலம் சீராகும். பேச்சில் திறமை வெளிப்படும். முயற்சி வீண்போகாது. துணிவு கூடும். எதிரிகள் அடங்குவார்கள். இயந்திரப் பணியாளர்கள், இன்ஜினீயர்கள் ஆகியோரது நோக்கம் நிறைவேறும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.

கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். மாதர்களது நிலை உயரும். மக்கள் நலம் சீராக இருந்துவரும். சூரியன், சனி, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அரசுப் பணிகளில் விழிப்புத் தேவை. தொழிலாளர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். அந்த அளவுக்கு ஆதாயம் இராது. பிற மொழி, மத, இனக்காரர்களை நம்பி எதிலும் ஈடுபடவேண்டாம். மற்றவர்களிடம் சுமுகமாகப் பழகுவதன் மூலம் நலம் கூடலாம். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். தந்தையால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,நவம்பர் 6, 9, 10, 12..

திசைகள்: வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, இளநீலம், பச்சை, சிவப்பு.

எண்கள்: 3, 5, 6, 9.

பரிகாரம்: சூரியன், சனி, ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. ஏழை, எளியவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவுவது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x