Published : 16 Feb 2017 09:42 AM
Last Updated : 16 Feb 2017 09:42 AM
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாயும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். இயந்திரப்பணிகள் ஆக்கம் தரும். பொறியாளர்களது நிலை உயரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். திரவப் பொருட்கள் லாபம் தரும். புதியவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும்.
இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்ப நலனில் கவனம் தேவை. வாரிசுகளால் செலவு ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வாரக் கடைசியில் நல்லதொரு தகவல் வந்து சேரும். போட்டி பந்தயங்களிலும், வழக்குகளிலும் விளையாட்டுகளிலும் வெற்றி காண வழிபிறக்கும். தகவல் தொடர்புத் துறை சார்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தர்மப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 16, 17, 22.
திசைகள்: தென்மேற்கு, தெற்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், சிவப்பு.
எண்கள்: 4, 9.
பரிகாரம்: சூரியன், சுக்கிரன், கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 5-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது நல்லது. நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, விருந்துகளில் ஈடுபாடு உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.
ஜலப்பொருட்கள் லாபம் தரும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் சுபசெலவு செய்ய வேண்டிவரும். பயணத் தால் நலம் உண்டாகும். கணிதம், எழுத்து, பத்திரிகைத் தொழில்கள் ஆக்கம் தரும். ஜன்ம ராசியில் சனியும், 12-ல் குருவும் இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டிவரும். இடமாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் நிலையாக இருக்காது. தலை, வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 16, 17, 22.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பச்சை, வெண்மை.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: குரு, சனி, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் குரு 11-ல் உலவுவது சிறப்பாகும். சூரியன், சுக்கிரன், கேது ஆகியோரும் அனுகூலமாக உலவுகிறார்கள். முக்கியமான எண்ணங்கள் இனிதே நிறைவேறும். பல வழிகளில் பணம் வந்து சேரும். பொன்னும் பொருளும் குவியும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நற்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். நிலபுலங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும்.
அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். ஆன்மிகப் பணிகள் நிறைவேறும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். சனி, புதன் அனுகூலமாக உலவாததால் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப நலனில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் இடர்ப்பாடுகள் ஏற்பட்டு விலகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 16, 17, 22.
திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 6, 7.
பரிகாரம்: சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது. ஏழை, எளியவர்களுக்கும் கால் ஊனமுள்ளவர்களுக்கும் உதவி செய்யவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு அதிபதி சனி 11-ஆம் இடத்தில் உலவுவது விசேஷமாகும். செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரும் அனுகூலமாக உலவுகிறார்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். எடுத்த காரியத்தில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பொது நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். பண வரவு திருப்தி தரும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் வருவாய் கிடைத்துவரும்.
மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். விளையாட்டுகளில் வெற்றி கிட்டும். மாணவர்களது திறமை வெளிப்படும். வியாபாரம் பெருகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் ஏற்படும். தகவல் தொடர்புத் தொழில்கள் ஆக்கம் தரும். குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். வீண்வம்பு கூடாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 16, 17.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு
நிறங்கள்: நீலம், சிவப்பு, பச்சை, வெண்மை.
எண்கள்: 5, 6, 8, 9.
பரிகாரம்: சூரியன், ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
குரு, சுக்கிரன், சனி அனுகூலமாக உலவுகிறார்கள். தொலைதூரத் தொடர்பால் பயன் பெறுவீர்கள். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். நல்லவர்களின் நட்புறவு கிடைக்கும். தெய்வ தரிசனம், சாது தரிசனம் கிட்டும். பெரியவர்கள் ஆசி புரிவார்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.
வாரிசுகள் நலம் உண்டாகும். பெற்றோர் நலம் சீராகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடிவரும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு உயர் பொறுப்புகள் கிடைக்கும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும். அலைச்சல் வீண் போகாது. குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்களால் ஆதாயம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 16, 17, 22.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 8.
பரிகாரம்: நாக பூஜை செய்வது நல்லது.
மீன ராசி வாசகர்களே
சுக்கிரன், ராகுவின் நிலை சிறப்பாக இருப்பதால் உங்கள் வசீகர சக்தி கூடும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கை நிகழும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். பயணம் சார்ந்த இனங்கள் லாபம் தரும். ஏற்றுமதி இறக்குமதி மூலம் ஆதாயம் கிடைக்கும். ஆராய்ச்சித் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஜன்ம ராசியில் செவ்வாயும், 8-ல் குருவும் உலவுவதால் உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.
எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. 12-ல் சூரியன், புதன், கேது ஆகியோர் உலவுவதால் அரசுப் பணிகளில் எச்சரிக்கை தேவை. தந்தையால் சங்கடம் ஏற்படும். அரசு அபராதம் கட்ட வேண்டிவரும். கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். தொழில் அதிபர்களும் உத்தியோகஸ்தர்களும், ஆன்மிகவாதிகளும் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். வீண் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதி: பிப்ரவரி 22.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: புகைநிறம், இளநீலம்.
எண்கள்: 4, 6.
பரிகாரம்: குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி, அவர்களது நல்லாசிகளைப் பெறவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT