Published : 07 Jul 2016 12:17 PM
Last Updated : 07 Jul 2016 12:17 PM
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும், 10-ல் புதனும் 11-ல் குருவும் ராகுவும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பிறருக்குத் தாராளமாக உதவி செய்வீர்கள். சுபகாரியங்கள் நிகழும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழிபிறக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும்.
பெரியவர்கள், தனவந்தர்கள் ஆசிகளும் ஆதரவும் பெறுவீர்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். கடல் வாணிபம் லாபம் தரும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். உத்தியோகஸ்தர்களது எண்ணம் ஈடேறும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணத்தால் நன்மை உண்டு.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 7, 9.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், பொன்நிறம், இளநீலம், பச்சை.
எண்கள்: 3, 4, 5, 6.
பரிகாரம்: விநாயகரை வழிபடவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவதால் தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். போக்குவரத்து இனங்கள், தோல் பொருட்கள், ஏற்றுமதி இறக்குமதி ஆகியவை லாபம் தரும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியம் நிறைவேறும். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 9-ம் இடம் மாறுவதால் கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும்.
மாதர்களது நிலை உயரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். ஜன்ம ராசியில் செவ்வாயும் சனியும் இருப்பதாலும், 4-ல் கேது உலவுவதாலும், சூரியன் 8-ல் இருப்பதாலும் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பெற்றோர் நலனிலும் அக்கறை தேவைப்படும். அரசுப் பணிகளில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. அவசரம் கூடாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 10, 11.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், வெண்சாம்பல் நிறம்.
எண்கள்: 4, 6.
பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம், ஹனுமன் சாலீஸா படிப்பதும் கேட்பதும் நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 8-ல் புதனும் 9-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். செய் தொழில் விருத்தி அடையும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மாணவர்களது திறமை பளிச்சிடும். ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மேடைப் பேச்சாளர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.
உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். தகவல் தொடர்பு ஆக்கம் தரும். பொருளாதாரத் துறையினர் வளர்ச்சி காண்பார்கள். சுப காரியங்கள் நிகழும். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 8-ம் இடம் மாறுவது நல்லது. கலைஞர்களுக்கு மந்த நிலை விலகும். மாதர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை உருவாகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். பெரியவர்களது ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 10, 11.
திசைகள்: வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 7.
பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும், 11-ல்செவ்வாயும், சனியும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். வழக்குகளிலும் பந்தயங்களிலும் வெற்றி காணச் சந்தர்ப்பம் உருவாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.
இன் ஜினீயர்களது எண்ணம் நிறைவேறும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகமாகும். சகிப்புத்தன்மை தேவை. கூட்டாளிகளால் பிரச்சினைகள் சூழும். உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், பயணத் தொழில் புரிபவர்கள் ஆகியோருக்கெல்லாம் சோதனைகள் சூழும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 7, 10, 11.
திசைகள்:மேற்கு, தெற்கு.
நிறங்கள்: கருநீலம், சிவப்பு.
எண்கள்: 1, 8, 9.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரையும் ரங்கநாயகியையும் வழிபடுவது நல்லது. பெரியவர்களிடம் பணிவன்போடு பழகுவது அவசியமாகும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் புதனும் 7-ல்குருவும், 10-ல் செவ்வாயும் சனியும் சஞ்சரிப்பதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். அவற்றில் வெற்றியும் கிட்டும். மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்கள் நிகழும். வியாபாரம் பெருகும். கடல் சார்ந்த பொருட்கள் லாபம் தரும். எதிரிகள் அடங்குவார்கள்.
வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். பயணம் உண்டு. எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். பொருளாதார நிலை திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்பு உருவாகும். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடம் மாறுவதால் பெண்களால் தொல்லைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 7, 9.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
நிறங்கள்: பச்சை, பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 5, 8, 9
பரிகாரம்: ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 5-ம் இடம் மாறுவதும் நல்லதே. முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் நன்மையும் உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்புடைய வர்த்தகம் லாபம் தரும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். கேளிக்கை, உல்லாசங்களிலும், விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். பெண்களால் நலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். பெற்றோராலும் மக்களாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 10, 11.
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், புகைநிறம்.
எண்கள்: 4, 6
பரிகாரம்: குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வருவது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT