Published : 15 Jun 2017 09:57 AM
Last Updated : 15 Jun 2017 09:57 AM

வார ராசிபலன் 15-6-2017 முதல் 21-6-2017 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 11-ல் ராகுவும் உலவுவது நல்லது. தொலைதூரத் தொடர்பு பயன்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும். மாணவர்களது நிலை உயரும். ஆராய்ச்சியாளர்கள் புகழ் பெறுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலம் சீராகும். 5-ல் கேதுவும் 12-ல் குருவும் இருப்பதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணிக் கைப்பொருளை வீணாக்க வேண்டாம். கணவன் மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும்.

ஆடவர்களுக்குப் பெண்களால் சங்கடம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி காண அரும்பாடுபட வேண்டிவரும். பொருளாதார நிலை சாதாரணமாகவே இருந்துவரும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களும் தொழிலாளர்களும் அதிகம் பாடுபட வேண்டிவரும். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். மறதியால் அவதிப்பட வேண்டிவரும். கால் சம்பந்தமான உபத்திரவம் ஏற்படும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 15, 16, 19. .

திசைகள்: தென்மேற்கு, வடக்கு. .

நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை

எண்கள்: 4, 5.

பரிகாரம்: கணபதிக்கு அருகம்புல்லால் அர்ச்சனை செய்யவும்.



விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். அறிவாற்றல் பளிச்சிடும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பொன் நிறப்பொருட்கள் லாபம் தரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பேச்சில் திறமை வெளிப்படும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆன்மிகவாதிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். ராசிநாதன் செவ்வாய் 8-ல் சூரியனுடன் கூடியிருப்பதாலும், ஜன்ம ராசியில் சனி இருப்பதாலும் உடல் நலம் பாதிக்கும். உஷ்ணாதிக்கம் கூடும். அரசுப்பணிகளில் விழிப்புத் தேவை. சுக்கிரன் 6-ல் இருப்பதால் கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்னைகள் சூழும். கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 15, 16, 19. .

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, வ்டக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், பச்ச

எண்கள்: 3, , 4, 5.

பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும்.



தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 5-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். ஆன்மிகப்பணிகளில் நாட்டம் கூடும். நண்பர்களும் உறவினர்களும் உதவிபுரிய முன்வருவார்கள். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் சேரும். அல்லது அவற்றால் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும்.

கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். மக்களால் அளவோடு நலம் உண்டாகும். 7-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் இருப்பதால் பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகுவது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். குரு 10-ம் இடத்திலும், சனி 12-ம் இடத்திலும் இருப்பதால் தொழிலில் அதிக கவனம் தேவை. விரும்பத்தகாத இடமாற்றமும், நிலைமாற்றமும் ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. இளைய சகோதர, சகோதரிகளால் பிரச்னைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 15, 16, 19.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை.

எண்கள்: 6, 7.

பரிகாரம்: சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. ஆதரவு இல்லாதவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவவும்.



மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் கூடும். நல்ல தகவல் வந்து சேரும். கேளிக்கை உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சுகமும் சந்தோஷமும் கூடும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். நிலபுலங்கள் லாபம் தரும். புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்புக் கூடிவரும். வாகன யோகம் உண்டாகும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். கலைஞர்கள், வெற்றி நடைபோடுவார்கள்.

மாதர்களது நோக்கம் நிறைவேறும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் வெற்றி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் இருப்பதால் இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும் என்றாலும் அவற்றை எளிதில் சமாளித்துவிடுவீர்கள். தெய்வபலம் உங்களுக்குப் பக்கபலமாக இருந்து காக்கும். சுப காரியங்கள் நிகழும். மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 15, 16, 19. . .

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், சிவப்ப

எண்கள்: 3, 6.

பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.



கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. அந்தஸ்தும் மதிப்பும் உயரும் நேரமிது. உடல் நலம் கவனிப்பின்பேரில் சீராகும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். நல்லவர்களின் நட்பு நலம் சேர்க்கும். பேச்சில் திறமை வெளிப்படும். பண நடமாட்டம் கூடும். சுபச் செலவுகளை மேற்கொள்ள வேண்டிவரும். நல்ல தகவல் ஒன்று வாரப் பின்பகுதியில் வந்து சேரும். உடன்பிறந்தவ்களாலும் பெண்களாலும் அனுகூலம் உண்டாகும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். குரு 8-ல் உலவுவதால் உத்தியோகஸ்தர்கள் விழிப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். பொருளாதாரத் துறையினரும் ஆசிரியர்களும், ஆன்மிகவாதிகளும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. வீண் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். தொழில் அதிபர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 15, 16, 19 . .

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பச்சை.

எண்கள்: 5, , 6, 8.

பரிகாரம்: குருவை வழிபடவும். நாக பூஜை செய்வது நல்லது.



மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 4-ல் புதனும் 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். முகப் பொலிவு கூடும். குடும்ப நலம் சிறக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும்.

பயணத்தால் அனுகூலம் உண்டாகும். 4-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் மார்பு, இதயம் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். குரு பலம் இருப்பதால் சமாளிக்க முடியும். 9-ல் சனி இருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவை. குரு, சுக்கிர பலத்தால் கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். வாரப் பின்பகுதியில் மனத்துக்கினிய சம்பவம் ஒன்று நிகழும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 19, 21. .

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, வடக்கு.

நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, பச்சை,

எண்கள்: 3, 4, 5, 6.

பரிகாரம்: மகா கணபதியை வழிபடவும

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x