Published : 05 May 2016 12:26 PM
Last Updated : 05 May 2016 12:26 PM
துலாம் ராசி வாசகர்களே
குரு, ராகு ஆகியோர் 11-மிடத்தில் உலவுவது சிறப்பாகும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும். பயணத்தால் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். போக்குவரத்து இனங்கள், தோல் பொருட்கள், ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் மூலம் லாபம் பெற வாய்ப்பு உண்டாகும். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். 7-ல் சூரியன், வக்கிர புதன், சுக்கிரன் ஆகியோர் உலவுவதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். கூட்டாளிகளால் சங்கடங்கள் ஏற்படும். எதிரிகள் இருப்பார்கள். வியாபாரிகள், கலைஞர்கள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள், இயந்திரப் பணியாளர்கள் பொறுப்புணர்ந்து காரியமாற்றினால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்:
மே 5 (முற்பகல்), 11.
திசைகள்:
வடகிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்:
சாம்பல் நிறம், பொன் நிறம்.
எண்கள்:
3, 4.
பரிகாரம்:
மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திரம் படிக்கவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-மிடத்தில் சூரியனும் புதனும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். குரு 10-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். புதிய பதவிகளும் பட்டங்களும் வந்து சேரும். வியாபாரம் பெருகும். பொருளாதார நிலை உயரும். என்றாலும் வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுக்கிர பலம் குறைந்திருப்பதால் பெண்களாலும் வாழ்க்கைத் துணைவியாலும் பிரச்சினைகள் ஏற்படும். கலைஞர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. ஜன்ம ராசியில் செவ்வாயும் சனியும் வக்கிரமாக இருப்பதாலும், 4-ல் கேது உலவுவதாலும் அலைச்சல் அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். அதிர்ஷ்டமான தேதிகள்: மே 5, 8, 9 (பகல்).
திசைகள்:
தென்மேற்கு, கிழக்கு.
நிறங்கள்:
ஆரஞ்சு, வெண்சாம்பல் நிறம்.
எண்கள்:
1, 4.
பரிகாரம்:
மகாலட்சுமியை வழிபடுவது நல்லது. சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்களைத் தானமாகத் தருவது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 5-ல் சுக்கிரனும், 9-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். 5-ல் சூரியன் இருந்தாலும் தன் உச்ச ராசியில் உலவுவதால் நலம் புரிவார். செவ்வாயும் சனியும் வக்கிரமாக இருப்பது நல்லது. மகப்பேறு பாக்கியம் கிட்டும். அதிர்ஷ்ட இனங்களால் லாபம் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். பெண்களுக்கு மன மகிழ்ச்சி கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். மகன் அல்லது மகளுக்கு வெளிநாடு செல்லும் பாக்கியம் ஏற்படும். ஞான மார்க்கத்திலும் பக்தி மார்க்கத்திலும் தெளிவு பிறக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்:
மே 5, 8, 9, 11.
திசைகள்:
தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு.
நிறங்கள்:
வெண்மை, மெரூன், ஆரஞ்சு .
எண்கள்:
1, 3, 6, 7.
பரிகாரம்:
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்கா பூஜை செய்வது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் சுக்கிரனும், 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவது சிறப்பாகும். குரு 8-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். நல்ல தகவல் வந்துசேரும். நண்பர்களாலும் உறவினர்களாலும் நலம் உண்டாகும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். அந்நியர்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழிலில் அதிக கவனம் தேவை. அலைச்சலைத் தவிர்க்க இயலாமல் போகும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு பிறரிடம் அன்புடன் பேசிப் பழகினால் அதிக நலம் பெறலாம். குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் உங்கள் செல்வாக்கை காப்பாற்றிக் கொள்ளலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்:
மே 5, 8, 9, 11.
திசைகள்:
மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்:
நீலம், சிவப்பு, வெண்மை. பச்சை.
எண்கள்:
5, 6, 8, 9.
பரிகாரம்:
ஆதித்தனை வழிபடவும். தந்தைக்கும் தந்தைவழி உறவினர்களுக்கும் உதவவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் 7-ல் குருவும், 10-ல் செவ்வாயும் சனியும் சஞ்சரிப்பதால் பண நடமாட்டம் அதிகமாகும். நல்ல தகவல் வந்துசேரும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். செயலில் வேகம் பிறக்கும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். முக்கியஸ்தர்களது தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். நிலபுலங்களால் ஆதாயம் பெற வாய்ப்பு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழிலில் கவனம் தேவை. பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. விஷத்தாலும் விஷ ஜந்துக்களாலும் சிலருக்குப் பாதிப்பு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்:
மே 5, 8, 9, 11.
திசைகள்:
மேற்கு, தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்:
நீலம், வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு.
எண்கள்:
1, 6, 8, 9.
பரிகாரம் :
நாகர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். குரு 6-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். பொருளாதார நிலை உயரும். கடன் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைஞர்களது எண்ணம் ஈடேறும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். நிலபுலங்களால் வருவாய் கிடைக்கும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். பயணத்தால் முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். செவ்வாயும் சனியும் 9-ல் வக்கிரமாக இருப்பதால் இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. சகோதர நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்ட தேதிகள்:
மே 5, 8, 9, 11.
திசைகள்:
வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்:
வெண்மை, பச்சை, இளநீலம், புகை நிறம்.
எண்கள்:
4, 5. 6.
பரிகாரம்:
சூரிய வழிபாடு செய்வது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT