Published : 25 Aug 2016 12:19 PM
Last Updated : 25 Aug 2016 12:19 PM
மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடத்திற்கு மாறுவது குறை ஆகும். குடும்பநலம் கவனிப்பின்பேரில் சீராக இருந்துவரும். நல்ல தகவல் வந்து சேரும். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். கடல் சார்ந்த பொருட்கள் லாபம் தரும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். அரசுப்பணியாளர்களது நிலை உயரும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்சினைகள் சூழும். உடன்பிறந்தவர்களாலும் வேலையாட்களாலும் தொல்லைகள் உண்டாகும். 26-ம் தேதி முதல் வாழ்க்கைத் துணை நலனில் கவனம் தேவைப்படும். பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 27 (முற்பகல்), 28 (பிற்பகல்), 29.l திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: செவ்வாய், சனிக்கு அர்ச்சனை செய்யவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் சுக்கிரனும், 5-ல் குருவும் 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. 26-ம் தேதி முதல் சுக்கிரன் 5-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்களது நோக்கம் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். மந்திர, தந்திர, யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். அலைச்சல் சற்றுக் கூடும் என்றாலும் அதற்கான பயன் கிடைக்கும். கெட்டவர்களின் தொடர்பை விலக்கி, நல்லவர்களின் நட்புறவை நாடிப் பெற்றால் நலம் கூடப் பெறலாம். வாரப் பின்பகுதியில் நல்ல தகவல் வந்து சேரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 28 (பிற்பகல்), 29.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 7.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு அர்ச்சனைகள் செய்யவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் ராகுவும், 6-ல் செவ்வாயும் சனியும் உலவுவது நல்லது. வார முன்பகுதியில் செலவுகள் அதிகரிக்கவே செய்யும். இடமாற்றம் உண்டாகும். குடும்ப நலனில் கவனம் தேவைப்படும். வாரப் பின்பகுதியில் பண வரவு கூடும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 4-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு அனுகூலமான போக்கு தென்படும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்களுக்கு லாபம் கூடும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். தந்தையால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் தப்பலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 28 (பிற்பகல்), 29.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.
நிறங்கள்: புகை நிறம், வெண்மை, இளநீலம், கருஞ்சிவப்பு.
எண்கள்: 1, 4, 6, 8, 9.
பரிகாரம்: மகா விஷ்ணுவை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது நல்லது. சூரியனும் செவ்வாயும் நலம் புரிவார்கள். வார முன்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழி பிறக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது நிலை உயரும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். வார நடுப்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் ஜலப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். 2-ல் சூரியனும், ராகுவும், 3-ல் குருவும், 5-ல் சனியும், 8-ல் கேதுவும் உலவுவதால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். மக்களால் மன அமைதி குறையும். தொலைதூரச் செய்திகள் மகிழ்ச்சி தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 26, 29.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம்.
எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்: விநாயகருக்கும் துர்க்கைக்கும் அர்ச்சனை செய்வது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசியில் சுக்கிரனும் 2-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 2-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. குடும்பத்தில் குதூகலம் கூடும். முக வசீகரத்தாலும் இனிமையான, திறமையான பேச்சாலும் மற்றவர்களைக் கவருவீர்கள். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஆதாயம் கிடைக்கும். செய்தொழில் வளர்ச்சி பெறும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். சொத்துகள் சேரும். சுப காரியங்கள் நிகழும். பெரியவர்களின் ஆதரவும் ஆசிகளும் கிடைக்கும். பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்பம் உருவாகும். அலைச்சலும் உழைப்பும் வீண்போகாது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்:ஆகஸ்ட் 27, 28 (பிற்பகல்).
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 6, 9.
பரிகாரம்: பராசக்தியை வழிபடவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். எடுத்த காரியத்தில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்புகளின் வலு குறையும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்கள் சேரும். சொத்துகள் மூலம் வருவாய் கிடைக்கும். திரவப் பொருட்கள் லாபம் தரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மதிப்பு உயரும். மக்களால் எண்ணங்கள் ஈடேறும். வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும். தந்தையாலும் அரசாங்கத்தாராலும் பிரச்னைகள் சூழும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திவருவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 27 (முற்பகல்), 28 (பிற்பகல்), 29.
திசைகள்: வடமேற்கு, மேற்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், மெரூன்.
எண்கள்: 6, 7, 8, 9.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT