Published : 22 Sep 2016 10:53 AM
Last Updated : 22 Sep 2016 10:53 AM
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் வலுத்திருக்கிறார். 3-ல் செவ்வாயும், 11-ல் புதன்; ராகு ஆகியோர் உலவுவது நல்லது. அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உடல் நலம் சீராகும். கலைஞானம் பெருகும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். சொத்துகள் மூலம் வருவாயும் கிடைக்கும்.
ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகள், பந்தயங்கள், வழக்குகள், விளையாட்டு ஆகியவற்றில் வெற்றி கிட்டும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானம், வானியல் சம்பந்தமான இனங்கள் ஆக்கம் தரும். 2-ல் சனி, 5-ல் கேது, 12-ல் சூரியன்; குரு ஆகியோர் உலவுவதால் பிள்ளைகளால் சில இடர்பாடுகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25, 26, 28.
திசைகள்: வடக்கு, தென் மேற்கு, தென் கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், பச்சை, இள நீலம், சிவப்பு.
எண்கள்: 4, 5, 6, 9. | பரிகாரம்: வேத விற்பன்னர்களுக்கு உதவவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் புதனும்; ராகுவும், 11-ல் சூரியனும்; குருவும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. பெரியவர்கள், தனவந்தர்கள், மேலதிகாரிகள் உதவுவார்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு கூடும்.
எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ரசாயனத் துறைகளைச் சேர்ந்தவர்கள், உத்தியோகஸ்தர்கள், அரசுப்பணியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் வளர்ச்சி காண்பார்கள். பொருளாதார நிலை உயரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். சுபச் செலவுகள் சற்று கூடும். வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் சேரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25 (பிற்பகல்), 26, 28.
திசைகள்: கிழக்கு, தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, வெண்சாம்பல் நிறம், பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 4, 5, 6. | பரிகாரம்: ஆஞ்சநேயர், விநாயகரை வழிபடுவது நல்லது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசிக்கு 3-ல் கேது, 10-ல் சூரியன், 11-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பு. முக்கியப் பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். முக்கியஸ்தர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் ஏற்படும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும்.
நிர்வாகத் திறமை கூடும். தந்தையாலும், வாழ்க்கைத்துணைவியாலும் நலம் ஏற்படும். பெண்களின் நோக்கம் நிறைவேறும். தெய்வப் பணிகள், தர்மப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஜன்ம ராசியில் செவ்வாய், 12-ல் சனி இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். தொழிலாளர்கள், விவசாயிகள் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் சங்கடங்களிலிருந்து தப்பலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 23 (காலை), 28.
திசைகள்: வட மேற்கு, கிழக்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு, இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 5, 6, 7. | பரிகாரம்: மாற்றுத்திறனாளிகள், வயோதிகர்களுக்கு உதவவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும், 9-ல் குருவும், 11-ல் சனியும் உலவுவது சிறப்பு. சுக்கிரன் 10-ல் இருந்தாலும் நலம் புரிவார். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்லவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நற்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். மகன் அல்லது மகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகமாகும். சமுதாய நல முன்னேற்றப் பணிகளில் ஈடுபாடுள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். கலைஞர்கள் திறமைக்கேற்ப வளர்ச்சிக் காண்பார்கள். செவ்வாய் 12-லும், கேது 2-லும், ராகு 8-லும் இருப்பதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்; எதிலும் நிதானமாக ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25, 26.
திசைகள்: தென் கிழக்கு, வடக்கு, வட கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம். | எண்கள்: 3, 5, 6, 8.
பரிகாரம்: துவரை தானம் செய்யவும். இளைஞர்களுக்கு உதவுவது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும், 10-ல் சனியும், 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. மனத்துணிச்சல் கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களைச் செவ்வனே செய்துமுடிப்பீர்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். சொத்துகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும்.
திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பலன் கிடைக்கும். இயந்திரப்பணியாளர்கள், இன்ஜினீயர்கள் வளர்ச்சி காண்பார்கள். பெற்றோரால் அளவோடு நலம் உண்டாகும். கணவன்-மனைவி உறவு நிலை சீராகும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உடன்பிறந்தவர்களால் நலம் பெருகும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள் ஆகியோர் பொறுப்புடன் கடமையாற்றி வருவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25, 26, 28.
திசைகள்: தென் கிழக்கு, தெற்கு, மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம். | எண்கள்: 6, 8, 9 .
பரிகாரம்: மகாகணபதியை வழிபடுவது நல்லது. வேதம் பயில்பவர்களுக்கும் பயின்றவர்களுக்கும் உதவவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் புதனும்; ராகுவும், 7-ல் குருவும், 8-ல் சுக்கிரனும், 10-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வியாபாரம் பெருகும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் நலம் ஏற்படும். உயர் பதவிகளும் பொறுப்புகளும் வந்து சேரும்.
கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். பெண்களின் எண்ணம் ஈடேறும். நண்பர்களும் உறவினர்களும் நலம் புரிவார்கள். சுகமும் சந்தோஷமும் கூடும். மகப்பேறு பாக்கியம் அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25, 26, 28.
திசைகள்: தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகை நிறம், பொன் நிறம், சிவப்பு, இள நீலம், வெண்மை .
எண்கள்: 2, 3, 4, 5, 6, 9. | பரிகாரம்: தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களுக்கும் உதவவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT