Published : 03 Nov 2016 12:02 PM
Last Updated : 03 Nov 2016 12:02 PM

வார ராசிபலன் 03-11-2016 முதல் 09-11-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும், 10-ல் செவ்வாயும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. 3-ம் தேதி சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. 4-ம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பணவரவு சற்று அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும்.

எதிரிகள் அடங்குவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது நோக்கம் நிறைவேறும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். 4-ம் தேதி முதல் புதன் 8-ம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்பு உண்டாகும். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 9-ம் இடம் மாறுவதால் குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். வாழ்க்கைத்துணை நலம் சீர்பெறும். பிள்ளைகளால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 4, 6, 7, 9.
திசைகள்: தென் கிழக்கு, வட மேற்கு, தெற்கு.
‎நிறங்கள்: மெரூன், இள நீலம், சிவப்பு.
எண்கள்: 6, 7, 9.‎ l பரிகாரம்: அஷ்டமச் சனிக்கு அர்ச்சனை, ஆராதனை செய்வது நல்லது.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும், 6-ல் சூரியனும்; புதனும், 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமான போக்குத் தென்படும். 4-ம் தேதி முதல் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

8-ம் தேதி முதல் சுக்கிரன் 8-ம் இடம் மாறுவதால் கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். அரசியல், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். அலைச்சல் அதிகரித்தாலும் பயன் கிடைக்கும். மறைமுக நோய்நொடி உபாதைகள் ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 6, 7, 9.
திசைகள்: வட மேற்கு, வடக்கு, கிழக்கு, வட கிழக்கு.
நிறங்கள்: மெரூன், பச்சை, பொன் நிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5, 7. l பரிகாரம்: பராசக்தியை வழிபடவும்.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் சனியும் உலவுவது நல்லது. எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். பொது நலப்பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழிலாளர் களின் முக்கிய பிரச்சினைகள் தீரும். அயல்நாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். எண்ணெய் வகையறாக்கள், இரும்பு, எஃகு போன்ற பொருட்கள், தோல் பொருட்கள், பயணம் சார்ந்த தொழில்களில் ஆதாயம் கிடைக்கும்.

4-ம் தேதி முதல் புதன் 6-ம் இடம் மாறுவதால் வியாபாரிகள் முன்னேற்றம் காண்பார்கள். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ம் இடம் மாறுவதும் சிறப்பாகாது. கணவன்-மனைவி உறவு நிலை பாதிக்கும். செவ்வாய் 8-ல் இருப்பதால் உடலில் காயம்படும். எக்காரியத்திலும் நிதானம் தேவை. பதற்றம் கூடாது. சகோதரர்களின் நலனில் அக்கறை தேவை. பிள்ளைகளால் சிறுசிறு பிரச்னைகளும் செலவுகளும் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 4, 9.
திசைகள்: தென் மேற்கு, மேற்கு.
நிறங்கள்: புகை நிறம், பச்சை, கரு நீலம். l எண்கள்: 4, 5, 8.
பரிகாரம்: பித்ரு கடன் ஆற்றுவது அவசியம். ஏழைப் பெண்களுக்கு உதவவும்.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும், 5-ல் சுக்கிரனும், உலவுவது நல்லது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கூடிவரும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி முன்னேறுவார்கள். பெண்களின் எண்ணம் ஈடேறும். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை, தரகு தொழிலைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். வாரப் பின்பகுதியில் சந்திராஷ்டமம்.

எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. நிதானமாக செயல்படவும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. முன்பின் அறியாதவர்களை நம்ப வேண்டாம். 4-ம் தேதி முதல் புதன் 5-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. 8-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடம் மாறுவதால் சுகம் குறையும். பெண்களால் அவமானம் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 4, 6, 7.
திசைகள்: தென் கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை.
எண்கள்: 5, 6. l பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது.



சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 3-ல் சூரியனும், 4-ல் சுக்கிரனும், 6-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். சொத்துகள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். பொருளாதார நிலை உயரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்துறையினர், உத்தியோகஸ்தர்கள், கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும்.

ஆசிரியர்கள், பேராசிரியர்களின் செல்வாக்கு உயரும். 4-ம் தேதி முதல் புதன் 4-ம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 5-ம் இடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். 4-ல் சனியும், 7-ல் கேதுவும் இருப்பதால் நண்பர்கள், உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 4, 6, 7, 9.
திசைகள்: தென் கிழக்கு, வட கிழக்கு, கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: இள நீலம், வெண்மை, ஆரஞ்சு, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 6, 9. l பரிகாரம்: நாகேஸ்வரரை வழிபடவும்.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும், 3-ல் சுக்கிரனும்; சனியும், 6-ல் கேதுவும் உலவுவது நல்லது. முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். நண்பர்களாலும், உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். எதிரிகளைச் சமாளிப்பீர்கள். ஆன்மிகவாதிகளின் மதிப்பு உயரும். செவ்வாய் 5-ல் இருப்பதால் பிள்ளைகளால் சில இடர்பாடுகள் ஏற்பட்டு விலகும்.

2-ல் சூரியனும், 12-ல் ராகுவும் உலவுவதால் பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்கலாகாது. 4-ம் தேதி முதல் புதன் 3-ம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. 8-ம் தேதி முதல் சுக்கிரன் 4-ம் இடம் மாறுவதால் புதிய பொருட்கள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 4, 6, 7, 9.
திசைகள்: தென் கிழக்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, இள நீலம், மெரூன், பச்சை.
எண்கள்: 5, 6, 7, 8. l பரிகாரம்: துர்கை அல்லது காளிக்கு நெய்தீபமேற்றி வழிபடவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x