Published : 09 Feb 2017 10:34 AM
Last Updated : 09 Feb 2017 10:34 AM
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 6-ல் செவ்வாயும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். 13-ம் தேதி முதல் சூரியன் 5-ம் இடத்திற்கு மாறுவது குறை. வார முன்பகுதி சிறப்பாக அமையும். முக்கியமான காரியங்களில் வெற்றி கிடைக்கும். மதிப்பு உயரும். பிறர் உங்களைப் போற்றுவார்கள். பண வரவு கூடும். திரவப் பொருட்கள் லாபம் கொண்டுவரும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். நண்பர்களும் உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.
மனத்தில் துணிவு பிறக்கும். தன்னம்பிக்கை கூடும். எதிர்ப்புக்களை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் நிலை உயரப் பெறுவார்கள். மக்களால் சில இடர்பாடுகள் ஏற்படும் என்றாலும் சமாளிப்பீர்கள். வயிறு சம்பந்தமான உபாதைகள் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 9, 15 (பிற்பகல்)
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தெற்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், பச்சை, சிவப்பு.
எண்கள்: 4, 5, 9.
பரிகாரம்: சுக்கிரன், கேதுவுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்ளவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் 5-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது நல்லது. தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். சுகமும் சந்தோஷமும் பெருகும். வாழ்க்கை வசதிகள் கூடும். முக்கியஸ்தர்கள் உதவி புரிவார்கள்.
கலைத் துறையினருக்கு வெற்றிகள் குவியும். புதிய ஒப்பந்தங்களும் வந்து சேரும். மகன், மகளுக்காகச் சுபச் செலவுகளை மேற்கொள்வீர்கள். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் லாபம் தரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். ஜன்ம ராசியில் சனியும் 4-ல் கேதுவும் 5-ல் செவ்வாயும் உலவுவதால் உடல் நலம் பாதிக்கும். வாரப் பின்பகுதியில் காரியானுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 9, 13, 15 பிற்பகல்.
திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், ஆரஞ்சு, வெண்மை.
எண்கள்: 1, 4, 6.
பரிகாரம்: சனி, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனை செய்யவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் குரு 11-ல் உலவுவது சிறப்பாகும். புதன், சுக்கிரன் அனுகூலமாக உலவுகிறார்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகள் நிறைவேறும். பண நடமாட்டம் நிறைவேறும். நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பு பயன் படும். வாழ்க்கை வசதிகள் பெருகும். குடும்பத்தினர் உதவுவார்கள்.
கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். 13-ம் தேதிமுதல் சூரியன் 3-ம் இடம் மாறுவதால் புதிய பட்டங்கள் கிடைக்கும். 12-ல் சனி இருப்பதால் வீண்செலவுகளைத் தவிர்க்கவும். எக்காரியத்திலும் நிதானமாக ஈடுபடவும். கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். புதிய சொத்துக்கள், பொருட்கள் வாங்க செலவு செய்வீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 13, 15 (பிற்பகல்).
திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், பச்சை, இளநீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 7.
பரிகாரம்: தொடர்ந்து சனிப் பிரீதி செய்து வரவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு அதிபதி சனி 11-இடத்தில் உலவுவது விசேடமாகும். செவ்வாய் சுக்கிரனும் அனுகூலமாக உலவுகிறார்கள். மனதில் துணிவு உலவும். தன்னம்பிக்கை கூடும். எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றிப் பெறுவீர்கள். எதிர்ப்புகளின் வலு குறையும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். முயற்சி வீண்போகாது. புதன் 1 ல் இருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் இருப்பது நல்லது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
வீண் வம்பு வேண்டாம். பயணத்தின்போது கவனம் தேவை. இயந்திரப் பணியாளர்கள், எஞ்சினியர்களுக்கும் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். சொத்துக்கள் சேரும். பெற்றோர் வழியில் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு வேலைக்காக நெடுநாட்கள் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். தரகு, கமிஷன் வியாபாரிகளுக்கு நன்மை உண்டு.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 9, 15 (பிற்பகல்).
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.
நிறங்கள்: கருநீலம், சிவப்பு, வெண்மை.
எண்கள்: 6, 8, 9.
பரிகாரம்: நாகரை வழிபடவும். சூரியனுக்கு அர்ச்சனை, ஆராதனை செய்யவும்.
கும்ப ராசி வாசகர்களே
குரு, சுக்கிரன், சனி ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். பொருளாதார நிலை உயரும். சுப காரியங்கள் நிகழும். நல்லவர்கள் உதவ முன் வருவார்கள். தெய்வ தரிசனமும், சாது தரிசனமும் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும். தர்ம குணம் வெளிப்படும்.
காரியத்தில் வெற்றி கிடைக்கும். புதிய பதவி, பட்டங்கள் தேடி வரும். கொடுக்கல், வாங்கல் லாபம் தரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். மாதர்களது நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். புதன் 12-ல் இருப்பதால் வியாபாரிகள் நஷ்டப்பட நேரலாம். எச்சரிக்கை தேவை. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும். அண்டை வீட்டாரிடம் சுமுகமாக இருக்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 9, 13 (இரவு).
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 8.
பரிகாரம்: ஆதித்தனையும் மகாவிஷ்ணுவையும் வழிபடவும். நாகரைத் தொடர்ந்து பூஜிப்பது நல்லது.
மீன ராசி வாசகர்களே
சூரியன், புதன், சுக்கிரன், ராகுவின் நிலை சிறப்பாக இருப்பதால் தோற்றப் பொலிவு கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்பு கூடும். மாதர்களது நிலை உயரும். அயல் நாட்டுத் தொடர்பு பயன் படும். வியாபாரம் பெருகும். எழுத்து, பத்திரிக்கை வகையில் லாபம் தரும்.
நண்பர்கள் நலம் புரிய முன் வருவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். மக்களால் சிறு சங்கடம் ஏற்படும். தந்தை நலனில் கவனம் தேவை. 13 –ம் தேதி முதல் அரசு விவகாரங்களில் எச்சரிக்கை அவசியமாகும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. நிதானம் அவசியம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 9, 13 (இரவு), 15 (பிற்பகல்).
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: புகைநிறம், ஆரஞ்சு, இளநீலம், பச்சை.
எண்கள்: 1, 4, 5, 6.
பரிகாரம்: குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. வேத விற்பன்னர்களுக்கு உதவி செய்யவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT