Last Updated : 28 Nov, 2013 12:00 AM

 

Published : 28 Nov 2013 12:00 AM
Last Updated : 28 Nov 2013 12:00 AM

இறைநம்பிக்கையின் அடையாளங்கள்

நம்பகத் தன்மையும் நாணய மும் இறை நம்பிக்கை யின் அடையாளங்கள் எனலாம். நம்பியவனை ஏமாற்றிவிட்டு, சட்டத்தின் பிடியிலி ருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றிருந்தாலும், இறைவன் என்னைத் தண்டித்து விடுவான் என்ற அச்சம் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான இறையுணர்வு; அதுதான் இறையாற்றலை உண்மையி லேயே புரிந்துகொண்டதன் விளைவு.

“உண்மையே பேசி, பொருளின் குறையை மறைக்காமல் நடந்துகொண்டால் வணிகத்தில் வளம் கிடைக்கும். பொய்பேசி, குறையை மறைத்தால் அந்த வணிகத்தில் ‘பரக்கத்’ (வளர்ச்சி) இருக்காது” என்றார்கள் நபிகளார்.

“வாய்மையோடும் நம்பகத் தன்மையோடும் நடந்துகொள்ளும் வணிகர், (மறுமையில்) இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள் (ஸித்தீகீன்), உயிர்த் தியாகிகள் (ஷுஹதா) ஆகியோருடன் இருப்பார்” என்றும் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்.

அவ்வாறே, ஒருவர் ஏற்கும் பதவி, பொறுப்பு, நிர்வாகம், பணி... இவையெல்லாம்கூட, அவரை நம்பி ஒப்படைக்கப்படும் அமானிதங்கள்தான். அந்த அமானிதத்தை அவர் முறையோடு காக்க வேண்டும். அதற்கான ஆற்றல் இல்லையென்றாலோ, இருந்தும் மனமில்லை என்றாலோ அப்பொறுப்பை ஏற்கவே கூடாது. ஏற்றபின் கடமையாற்றாது பொறுப்பை வீணாக்குவதோ தவறாகப் பயன்படுத்துவதோ நம்பிக்கைத் துரோகமாகும்.

ஆனால், எங்கும் இந்தத் துரோகம்தான் இன்று நடக்கிறது. இது கலியுகமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருவர் நபிகளாரிடம் வந்து, யுகமுடிவு எப்போது? என்று வினவினார். மக்கள்முன் உரையாற்றிக்கொண்டிருந்த நபிகளார் தமது உரையை முடித்தபின், “நம்பகத்தன்மை (அமானிதம்) பாழ்படுத்தப்பட்டால் யுகமுடிவை நீர் எதிர்பார்க்க லாம்” என்றார்கள். அம்மனிதரோ, “அது பாழ்படுத்தப்படுவது எவ்வாறு?” என்று வினா தொடுத்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “தகுதியற்றவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும்போது, நீர் மறுமையை எதிர்பாரும்” என்றார்கள்.

பொறுப்பில் உள்ளவர்கள், மக்களுக்குப் பதில் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்! படைத்தவனுக்குப் பதில் சொல்ல வேண்டுமே! அவனை ஏமாற்ற முடியாதே! அவன் தண்டிக்க ஆரம்பித்துவிட்டால் யாராலும் காப்பாற்ற முடியாதே! எனவே, அமானிதம் காப்பது அனைவரின் சமய, சமூகக் கடமையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x