Published : 25 Aug 2016 12:08 PM
Last Updated : 25 Aug 2016 12:08 PM

ஆன்மீக நூலகம்: புத்தர் சொன்ன நீதிக்கதை

ஒருவன் ஒரு வயலைத் தாண்டி போய்க்கொண்டிருந்தபோது புலி ஒன்றை எதிர்கொண்டான். அவன் ஓட, புலி அவனைத் துரத்தியது. செங்குத்துப் பாறையில் ஏறியவன் அங்கு விளிம்பில் தொங்கிக்கொண்டிருந்த காட்டுக் கொடியின் வேரைப் பிடித்துக்கொண்டு இறங்கினான். துரத்திய புலி மேலே இருந்து மோப்பம் பிடித்தபடி அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது. நடுங்கியபடி அவன் இறங்கிவந்த சமயம் கீழே இன்னொரு புலி அவனை அடித்துச் சாப்பிடக் காத்துக்கொண்டிந்தது. அந்தக் கொடி மட்டும்தான் அவனை விழாமல் தாங்கிக்கொண்டிருந்தது.

வெள்ளை, கறுப்பு என இரண்டு சுண்டெலிகள் அந்தக் கொடியை கொஞ்சம் கொஞ்சமாக கடிக்க ஆரம்பித்தன. பக்கத்தில் சிவந்து பழுத்திருந்த இனிய ஸ்ட்ராபெர்ரி பழத்தை அவன் பார்த்தான். ஒருகையில் காட்டுக் கொடியைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் அந்தப் பழத்தைப் பறித்தான். அடடா, எப்படி தித்தித்தது!

‘ஜென் சதை ஜென் எலும்புகள்’

தொகுப்பு: பால் ரெப்ஸ், நியோஜென் சென்ஸகி

தமிழில்: சேஷையா ரவி

அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621 310, திருச்சி மாவட்டம்

தொடர்புக்கு: 04332 273444

விலை: ரூ.160/-



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x