Published : 16 Feb 2017 09:41 AM
Last Updated : 16 Feb 2017 09:41 AM

வார ராசிபலன் 16-2-2017 முதல் 22-2-2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 7-ல் குருவும் 11-ல் சூரியனும், புதனும் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார நிலை உயரும். கணவன் மனைவி உறவுநிலை திருப்தி தரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை வெளிப்படும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். வியாபாரிகளுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் தங்கள் நிலையில் வளர்ச்சி காண்பார்கள்.

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். 8-ல் சனியும் 12-ல் செவ்வாயும் உலவுவதால் அதிகம் உழைக்க வேண்டிவரும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. இயந்திரங்கள், எரிபொருட்கள், கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது விழிப்புடன் இருக்கவும். உடன்பிறந்தவராலும் பணியாளர்களாலும் தொல்லைகள் சூழும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 16, 17, 22.

திசைகள்: வடகிழக்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: பொன் நிறம், ஆரஞ்சு, பச்சை.

எண்கள்: 1, 3, 5, 6, 7.‎

பரிகாரம்: அஷ்டமச் சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும். முருகனையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன், கேதுவும் 11-ல் செவ்வாயும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். அரசு காரியங்கள் இனிதே நிறைவேறும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் காண வழிபிறக்கும். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது எண்ணம் நிறைவேறும்.

புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, ஆதாயமோ கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் கரம் வலுக்குறையும். விளையாட்டுகளில் வெற்றி காணலாம். நிலபுலங்களால லாபம் உண்டு. 4-ல் ராகுவும், 6-ல் குருவும், 7-ல் சனியும் இருப்பதால் கெட்டவர்களின் தொடர்பு கூடாது. பெரியவர்கள், தனவந்தர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருக்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தாய் நலனிலும் மக்கள் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 16, 17.

திசைகள்: வடமேற்கு, தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.

எண்கள்: 1, 5, 6, 7, 9.

பரிகாரம்: குருவை வழிபடவும். வேத விற்பன்னர்களுக்கு உதவி செய்யவும்.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 5-ல் குருவும், 6-ல் சனியும், 10-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் எண்ணங்கள் நிறைவேறும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். பண வரவு திருப்தி தரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். மந்திர, தந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு கூடும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். உத்தியோகஸ்தர்களும் தொழிலாளர்களும் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள்.

இயந்திரப்பணிகள் லாபம் தரும். பொறியாளர் நிலை உயரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துகள் மூலம் வருவாயும் கிடைத்துவரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத்துறைகள் லாபம் தரும். மருத்துவம், ரசாயனம், ஆன்மிகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 9-ல் சூரியனும் கேதுவும் இருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 16, 17, 22.

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தென்மேற்கு, தெற்கு.

நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 4, 8, 9.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவது நல்லது.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 9-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். மாதர்களது நோக்கம் நிறைவேறும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். மக்களால் செலவுகள் அதிகரிக்கும். மறதியால் அவதி ஏற்படும்.

சூரியன், சனி, ராகு, கேதுவின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் தந்தையின் நலம் கவனிக்கப்பட வேண்டியிருக்கிறது. அரசாங்கத்தாரால் பிரச்சினைகள் சூழும். புதியவர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. கண், வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றம் தடைப்படும். தொழிலாளர்களும் உத்தியோகஸ்தர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. மேலதிகாரிகளால் பிரச்சினைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 16, 17, 22.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு, பச்சை.

எண்கள்: 5, 6, 9.

பரிகாரம்: சனிப்பிரீதி செய்து கொள்வது நல்லது. நாக பூஜை செய்வது அவசியமாகும்.



சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரன் உலவுவது நல்லது. இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. அளவோடு நலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். புதிய பொருட்களின் சேர்க்கையும் நிகழும். பொருளாதார நிலை சாதாரணமாகவே காணப்படும். புதிய துறைகளில் அதிக முதலீடு செய்யலாகாது. உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பிரச்சினைகள் சூழும்.

அலைச்சல் அதிகரிக்கும். சுகம் குறையும். கெட்டவர்களின் தொடர்பு கூடாது. நல்லவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. செவ்வாய் 8-ல் இருப்பதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். உடன்பிறந்தவர்களுக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 16, 17, 22.

திசை: தென்கிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை.

எண்: 6.

பரிகாரம்: நவக்கிரகங்களையும் வழிபடவும். கோளறு திருப்பதிகம் வாசிப்பது நல்லது.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் சனியும், 6-ல் சூரியனும் புதனும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். சொத்துகளால் வருவாய் கிடைத்துவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும்.

எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் வகையில் ஆக்கம் தரும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 7-ல் செவ்வாயும் 12-ல் ராகுவும் உலவுவதால் பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகுவது நல்லது. கணிதம், வியாபாரம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 16, 17, 22.

திசைகள்: மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், மெரூன், பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5, 7, 8.

பரிகாரம்: சுப்பிரமணியரையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x