Published : 11 Aug 2016 11:39 AM
Last Updated : 11 Aug 2016 11:39 AM
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் 11-ல் புதனும் சுக்கிரனும் ராகுவும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். பண வரவு கூடும். புதிய பதவிகளும் பட்டங்களும் உங்களைத் தேடிவரும். நிர்வாகத்திறமையால் சாதனைகளை ஆற்றுவீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். பயணம் சார்ந்த தொழில் லாபம் தரும். தகவல் தொடர்புத்துறைகளைச் சேர்ந்தவர்கள் செழிப்பான சூழ்நிலையைக் காண்பார்கள். நிலபுலங்கள் மூலம் வருவாய் கிடைக்கும். 5-ல் கேதுவும், 12-ல் குருவும் உலவுவதால் மக்களால் மன அமைதி குறையும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பொருள் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வீண்வம்பு கூடாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 11, 12, 16.
திசைகள்:வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை.
எண்கள்: 1, 4, 5, 6.
பரிகாரம்: விநாயகரையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் புதனும் ராகுவும் 11-ல் குருவும் உலவுவதால் குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழ அடிகோலப்படும். பொருளாதார நிலை உயரும். செயலில் வேகம் கூடும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். ஆராய்ச்சியாளர்களுக்கு வரவேற்பு கூடும். விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தரகர்கள், கணிதத்துறையினர், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்புக் கூடும். பயணம், லாபம் தரும். மக்கள் நலம் சீராகும். மக்களால் அனுகூலமும் உண்டாகும். பொன் நிறப்பொருட்கள் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள். 17-ம் தேதி முதல் சூரியன் 10-ம் இடத்திற்கு மாறுவதால் செய்து வரும் தொழில் விருத்தி அடையும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 12, 16, 17.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: பச்சை, வெண்சாம்பல்நிறம், பொன் நிறம்.
எண்கள்: 3, 4, 5.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். ஆன்மிகவாதிகள், அறப்பணியாளர்கள், ஜோதிடர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். எதிர்ப்புக்கள் இருந்தாலும் அவற்றைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். மாதர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். இதர கிரகங்களின் நிலை சிறப்பாக இல்லாததால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். அரசுப்பணிகளில் எச்சரிக்கை தேவை. தொழிலாளர்கள், விவசாயிகள், சுரங்கப்பணியாளர்கள், இஞ்சினீயர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 14, 16, 17.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: விரயச் சனிக்கும் செவ்வாய்க்கும் ஆராதனைகளைச் செய்வது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். எதிர்ப்புகள் அகலும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். சுபகாரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஆதாயம் வந்து சேரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். வியாபாரம் சூடுபிடிக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். போட்டிகளிலும் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். வாழ்க்கைத்துணைவரால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு ஏற்படும். மக்கள் நலம் சீராகும். குடும்பத்தில் சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். அந்நியர் தலையீட்டைத் தவிர்ப்பது நல்லது. பயணத்தில் விழிப்பு தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 11, 12, 16.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8, 9.
பரிகாரம்:
விநாயகரையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் 10-ல் செவ்வாய், சனி ஆகியோரும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். செய்தொழில் விருத்தி அடையும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். பொறியியல், சட்டம், காவல், ராணுவத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் நலம் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்புத் தருவார்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 11, 12, 14.
திசைகள்: தெற்கு, மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு, கருநீலம்.
எண்கள்: 1, 8, 9.
பரிகாரம்:
குருவுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும். வேத விற்பன்னர்களுக்கு உதவி செய்யவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் புதனும் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். செய்து வரும் தொழில் வளர்ச்சி பெறும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகள் ஆக்கம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தக, வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். பண நடமாட்டம் அதிகமாகும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். சுக்கிரன் 6-ல் இருப்பதால் கலைஞர்களுக்கும் பெண்களுக்கும் பிரச்னைகள் அதிகரிக்கும். ஆடவர்களுக்குப் பெண்களால் தொல்லைகள் ஏற்படும். வீண் ஆடம்பரம் கூடாது. கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. 17-ம் தேதி முதல் அரசுப்பணிகளில் நல்ல திருப்பம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 12, 14, 16.
திசைகள்: வடக்கு, தென்மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: பச்சை, புகைநிறம், பொன் நிறம்.
எண்கள்: 3, 4, 5, 9
பரிகாரம்: ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் வழிபடுவது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT