Published : 09 Feb 2017 10:34 AM
Last Updated : 09 Feb 2017 10:34 AM
மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 7-ல் குருவும் 10-ல் சூரியனும், புதனும் 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். 13-ம் தேதி முதல் சூரியன் 11-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்பு கூடிவரும். நண்பர்கள் நலம் புரிவார்கள். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி நடுவே பரஸ்பரம் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.
அரசியல், நிர்வாகத் துறையினருக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறையில் லாபம் உண்டு. ஆன்மிகப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். 5-ல் ராகுவும் 8-ல் சனியும் 12-ல் செவ்வாயும் இருப்பதால் மக்களாலும், உடன்பிறந்தவர்களாலும் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவைப்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 9, 13, 15 (பிற்பகல்).
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், பொன் நிறம், ஆரஞ்சு, பச்சை.
எண்கள்: 1, 3, 5, 6, 7.
பரிகாரம்: செவ்வாய், ராகு, சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும் 11-ல் செவ்வாயும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். 13-ம் தேதி முதல் சூரியன் 10-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. முன்னேற்றத்துக்கான தகவல் ஒன்று வந்து சேரும். உடன்பிறந்தவர்களுடன் கருத்தொற்றுமை கூடும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். நண்பர்களும் உறவினர்களும் நலம் புரிவார்கள். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
பொறியியல், சட்டம், காவல், ராணுவத் துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கையோ ஆதாயமோ கிடைத்துவரும். அலைச்சல் வீண்போகாது. குரு 6-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பொருள் கொடுக்கல் வாங்கலில் விழிப்பு தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 9, 13, 15 (பிற்பகல்).
திசைகள்: வடமேற்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 6, 7, 9.
பரிகாரம்: குருவையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 5-ல் குருவும், 6-ல் சனியும், 8-ல் புதனும், 10-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். குடும்ப நலம் சீராகும். பேச்சில் திறமை வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். பயணத்தினால் நன்மை உண்டாகும். நண்பர்கள், உறவினர்களால் காரியங்கள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள்.
இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியாளர்கள் நோக்கம் நிறைவேறும். மக்களால் மன மகிழ்ச்சி கூடும். புதிய பதவிகளும் பட்டங்களும் வந்து சேரும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். 8-ல் சூரியனும், 9-ல் கேதுவும் உலவுவதால் தந்தை நலம் பாதிக்கும். 13-ம் தேதி முதல் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 9, 13, 15 (பிற்பகல்).
திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தென்மேற்கு, தெற்கு.
நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 4, 5, 8, 9.
பரிகாரம்: பித்ரு கடன்களை ஆற்றுவது அவசியமாகும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன் உலவுவது நல்லது. 13-ம் தேதி முதல் சூரியன் 8-ம் இடத்திற்கு மாறுவது குறை ஆகும். கலைத்துறையினருக்கும் மாதர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். ஆதாயமும் கிடைக்கும். திரவப்பொருட்கள் லாபம் தரும். குடும்பத்தில் சலசலப்புக்கள் இருந்துவரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். சூரியன், சனி ஆகியோர் அனுகூலமான உலவாததால் அரசுப் பணிகளில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. மக்களாலும் தந்தையாலும் சங்கடம் உண்டாகும். கண், வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 9, 13, 15 (பிற்பகல்).
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, சிவப்பு.
எண்கள்: 6, 9.
பரிகாரம்: துர்க்கையையும் விநாயகரையும் வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும், புதனும், 8-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. 13-ம் தேதி முதல் சூரியன் 7-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. வார ஆரம்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். பெற்றோர் நலனில் கவனம் தேவைப்படும். அலைச்சல் அதிகமாகும். உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.
பேச்சில் திறமை வெளிப்படும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், நிர்வாகிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் புகழோடு பொருளும் பெறுவார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 13, 15 (பிற்பகல்).
திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை, இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 5, 6.
பரிகாரம்: குருவையும் செவ்வாயையும் வழிபடவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் சனியும், 6-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். 13-ம் தேதி முதல் சூரியன் 6-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். பண நடமாட்டம் அதிகமாகும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். நல்லவர்களின் நட்புறவு கிடைக்கும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்புக் கூடும்.
ஆன்மிக, அறநிலையப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். 13-ம் தேதி முதல் அரசுப் பணியாளர்களும், அரசியல்வாதிகளும் வெளிச்சமான பாதையைக் காண்பார்கள். எதிர்ப்புக்கள் விலகும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். குடும்ப நலம் சீராகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். எதிர்பாராத செலவுகளும் அவ்வப்போது ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 9, 13 (இரவு), 15 (பிற்பகல்).
திசைகள்: மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: நீலம், மெரூன், பொன் நிறம்.
எண்கள்: 3, 7, 8.
பரிகாரம்: துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT