Published : 16 Jun 2016 11:49 AM
Last Updated : 16 Jun 2016 11:49 AM

வார ராசி பலன் 16-06-2016 முதல் 22-06-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 9-ல் சுக்கிரனும், 11-ல் குருவும் ராகுவும் உலவுவது சிறப்பாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கலைத்துறை ஊக்கம் தரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில்விருத்தி அடையும்.

மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு கூடிவரும். பொருளாதார நிலை திருப்தி தரும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உதவிபுரிய முன்வருவார்கள். தெய்வப்பணிகள் நிறைவேறும்.

நல்ல தகவல் வாரப் பின்பகுதியில் வந்து சேரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகைத் துறையினர் வளர்ச்சி காணுவர்.உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 16, 20, 22.

திசைகள்:வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், பொன்நிறம், இளநீலம், பச்சை.

எண்கள்: 3, 4, 5, 6.

பரிகாரம்: முருகன், ஆஞ்சநேயரை வழிபடவும்.

விருச்சிக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது நல்லது. இதர முக்கியமான கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எதிலும் சிறப்பான நன்மைகளை இந்த நேரத்தில் எதிர்பார்க்க இயலாது. ஜாதக பலம் உள்ளவர்கள் கவலைப்படத் தேவையில்லை. பணவரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும்.

மனத்தில் நிம்மதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிவரும். வீண் அலைச்சல் ஏற்படும். தலை, கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு ஓரளவு வளர்ச்சி தெரியவரும். பயணம் சார்ந்த தொழில் லாபம் தரும்.

19-ம் தேதி முதல் செவ்வாய் வக்கிரமாக 12-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. மதிப்பும் அந்தஸ்தும் குறையும். 20-ம் தேதி முதல் புதன் 8-ம் இடத்திற்கு மாறுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 20, 22.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, வெண்சாம்பல்நிறம்.

எண்கள்: 4, 6.

பரிகாரம்: சுப்பிரமணியர், ஆஞ்சநேயரை வழிபடவும். சனிப்பிரீதி செய்யவும்.

தனுசு ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் புதனும் 9-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்கள் உங்களுக்கு நலம்புரிய முன்வருவார்கள். நல்ல காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிடைக்கும். வியாபாரம் பெருகும். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். பொருளாதார நிலை திருப்தி தரும்.

எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் கூட ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகமாகும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. அடிவயிறு, முதுகு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். இயந்திரப்பணியாளர்கள் பொறுப்புடன் காரியமாற்றுவதுஅவசியமாகும். 19-ம் தேதி முதல் செவ்வாய் 11-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. மக்களாலும் உடன்பிறந்தவர்களாலும் நலம் உண்டாகும். 20-ம் தேதி முதல் புதன் 7-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்:

ஜூன் 16, 20, 22.

திசைகள்: வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்:

மெரூன், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 7.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.

மகர ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும், 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவது சிறப்பாகும். நிர்வாகத்திறமை வெளிப்படும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். எரிபொருள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறைகள் மூலம் லாபம் கிடைக்கும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள்.

தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். 19-ம் தேதி முதல் செவ்வாய் வக்கிரமாக 10-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. செய் தொழில் வளர்ச்சி பெறும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். 20-ம் தேதி முதல் புதன் 6-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கணிதத்துறையாளர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 16, 22 (இரவு).

திசைகள்: மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: கருநீலம், சிவப்பு, பச்சை.

எண்கள்: 1, 5, 8, 9.

பரிகாரம்: துர்க்கை, விநாயகரை வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.

கும்ப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 5-ல் சுக்கிரனும் 7-ல் குருவும், 10-ல் செவ்வாயும் சனியும் சஞ்சரிப்பதால் விசேடமான நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள். சுபகாரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் உருவாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். கலைத்துறை ஊக்கம் தரும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

செய்தொழில் விருத்தி அடையும். சொத்துகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். பண நடமாட்டம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் வாரப் பின்பகுதியில் கூடிவரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானம், மருத்துவம், ரசாயனம் தொடர்பான துறைகள் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்களும் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 16, 20, 22.

திசைகள்: மேற்கு, தெற்கு, தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெண்மை, பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 8, 9.

பரிகாரம்: நாகரை வழிபடுவது நல்லது.

மீன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 6-ல்ராகுவும் உலவுவது சிறப்பாகும். வாரப் பின்பகுதியில் சந்திரனும் சாதகமாக உலவுகிறார். இதனால் கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப்பொருட்களும் சேரும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். மாதர்களது நோக்கம் நிறைவேறும்.

பயணத்தால் அனுகூலம் ஏற்படும். இதர கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் உடல் ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டிவரும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. மக்களால் மன அமைதி குறையும். பெற்றோர் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 19-ம் தேதி முதல் செவ்வாய் வக்கிரமாக 8-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. எக்காரியத்திலும் வேகத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 20, 22.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.

lநிறங்கள்: வெண்மை, இளநீலம், புகைநிறம்.

எண்கள்: 4, 6.

பரிகாரம்: குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி நல்லாசிகளைப் பெறவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x