Published : 29 Sep 2016 10:53 AM
Last Updated : 29 Sep 2016 10:53 AM
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன், ராசியிலேயே வலுத்திருக்கிறார். 3-ல் செவ்வாயும் 11-ல் ராகுவும் உலவுவது நல்லது. தோற்றப்பொலிவு கூடும். கலைஞானம் வெளிப்படும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, ஆதாயமோ கிடைக்கும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பயணத்தால் நலம் உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும்.
பணவரவு கூடும் என்றாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். சிக்கனம் தேவை. அரசுப்பணியாளர்கள், அரசியல்வாதிகள், உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றிவருவதன் மூலம் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். மக்களாலும் தந்தையாலும் செலவுகள் ஏற்படும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 3, 5.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், இளநீலம், சிவப்பு.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: ஆதித்தனையும் குருவையும் வழிபடுவது நல்லது. தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களுக்கும் உதவி செய்யவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் ராகுவும் 11-ல் சூரியனும் புதனும் குருவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியத்தில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். புதியவர்களின் சந்திப்பும் அவர்களால் அனுகூலமும் உண்டாகும். பயணத்தால் காரியம் நிறைவேறும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஆதாயம் கிடைக்கும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமையால் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள்.
வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தரகர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்களது நிலை உயரும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள சந்தர்ப்பம் கூடிவரும். தந்தையாலும் மக்களாலும் நலம் உண்டாகும். ஜன்ம ராசியில் சனியும், 4-ல் கேதுவும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். தாய் நலனில் அக்கறை தேவைப்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 30, அக். 2, 3, 5.
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை, வெண்சாம்பல்நிறம், பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 4, 5, 6.
பரிகாரம்: ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசிக்கு 3-ல் கேதுவும் 10-ல் சூரியனும் புதனும் 11-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கூடும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும்.
கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளில் அதிக வருவாய் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். பெண்களுக்கு மன மகிழ்ச்சி கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்சினைகள் சூழும். மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். எக்காரியத்திலும் வேகம் கூடாது. நிதானம் மிகத் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 30, அக். 2, 3.
திசைகள்: வடமேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு, பச்சை, இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 5, 6, 7.
பரிகாரம்: ஹனுமன் சாலீஸா படிப்பதும் கேட்பதும் நல்லது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். புதன் 9-லும் சுக்கிரன் 10-லும் உலவினாலும் நலம் புரிவர். 29-ம் தேதி விசேடமானதாகாது. எதிலும் யோசித்து, நிதானமாக ஈடுபடவும். மன அமைதி குறையும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். 30-ம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். பண வரவு கூடும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தான, தர்மப்பணிகளில் நாட்டம் அதிகமாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.
தொழிலில் வளர்ச்சி காணலாம். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயனை நிச்சயம் பெறுவீர்கள். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். மக்களால் நலம் கூடும். செவ்வாய், ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அக்கம்பக்கத்தாரால் பிரச்னைகள் ஏற்படும். புதியவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். சொத்து சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 30, அக். 2, 3, 5.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8.
பரிகாரம்: விநாயகரையும், துர்க்கையையும் வழிபடுவது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 9-ல் சுக்கிரனும் 10-ல் சனியும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். அறிவாற்றலும் தோற்றப்பொலிவும் கூடும். எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.
விளையாட்டிலும், போட்டிப் பந்தயங்களிலும், வழக்கிலும் வெற்றி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். சூரியன், குரு, ராகு, கேது ஆகியோர் அனுகூலமாக உலவாததால் மேலதிகாரிகளிடமும், பெரியவர்களிடமும் பணிவோடு நடந்து கொள்வது நல்லது. புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். பொருளாதாரம், அரசியல் சம்பந்தமான காரியங்களில் எச்சரிக்கை தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 3, 5.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம், பச்சை.
எண்கள்: 5, 6, 8, 9 .
பரிகாரம்: துர்க்கையையும், மகாகணபதியையும் வழிபடுவது நல்லது. குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி அவர்களது நல்வாழ்த்துக்களைப் பெறவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 7-ல் குருவும் 8-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிய முன்வருவார்கள். பண நடமாட்டம் அதிகரிக்கும். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். நிலபுலங்கள், வாகனங்கள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும்.
கணவன் மனைவி உறவு நிலை சீராகும். மக்களால் நலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத்துறைகள் லாபம் தரும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். ஆராய்ச்சியாளர்கள் புகழ் பெறுவார்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும். சுபகாரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 30, அக். 2 (பகல்), 5.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகைநிறம், பொன் நிறம், சிவப்பு, இளநீலம், வெண்மை .
எண்கள்: 3, 4, 6, 9.
பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT