Published : 23 Jun 2016 11:48 AM
Last Updated : 23 Jun 2016 11:48 AM
மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும்; சுக்கிரனும், 5-ல் குருவும், 11-ல் கேதுவும் உலவுவதால் முக்கியமான காரியங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். நண்பர்களாலும் உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். வார நடுப்பகுதியில் ஆன்மிக, அறநிலையப் பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
மனதில் துணிவு பிறக்கும். எதிர்ப்புகளை வெல்லும் சக்தி உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். சுகம் குறையும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். இயந்திரப் பணியாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர் முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் இருந்துவரும். கலைஞர்கள், அரசுப் பணியாளர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்), 26.
திசைகள்: தென் கிழக்கு, வட மேற்கு, வட கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன்நிறம்.
எண்கள்:1, 3, 6, 7.
பரிகாரம்: அஷ்டமத்தில் வக்கிரமாக உள்ள சனிக்கு அர்ச்சனை செய்வது நல்லது. ஏழை, எளியவர்களுக்கு உதவவும். காகத்துக்கு அன்னமிடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. தொலைதூரத் தொடர்பு பயன்படும். நல்ல தகவல் வந்து சேரும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். உடன்பிறந்தவர்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைக்கும்.
பேச்சாளர்கள், ஆசிரியர்கள், சட்ட வல்லுனர்கள் வளர்ச்சி காண்பார்கள். வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற இனங்கள் ஆக்கம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பிள்ளைகளாலும் வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடனாகக் கேட்ட பணம் கிடைக்கும். 28-ம் தேதி முதல் நிலபுலங்கள் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்), 26.
திசைகள்: வடக்கு, வட மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பச்சை, இளநீலம்.
எண்கள்: 5, 6, 7.
பரிகாரம்: கணபதியை வழிபடுவது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் ராகுவும், 6-ல்சனியும் உலவுவது சிறப்பு. வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் சாதாரணமாகவே காணப்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப நலனில் அக்கறை தேவை. யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.
அதன் பிறகு நல்ல திருப்பம் உண்டாகும். கலைத் துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது எண்ணம் ஈடேறும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். உழைப்பு வீண்போகாது. பிள்ளைகளாலும், வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகள் உதவுவார்கள்.
புதிய ஆடை, அணிமணிகள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. பெரியவர்களிடம் பணிவன்புடன் பழகுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 26, 27 (முற்பகல்).
திசைகள்: தென் மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: கறுப்பு, பச்சை, வெண்மை, இள நீலம்.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: விநாயகர், தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 12-ல் சுக்கிரனும் உலவுவதால் நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பேச்சில் திறமை வெளிப்படும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். வாழ்க்கை வசதிகள் பெருகும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். பிள்ளைகளாலும், வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும். 2-ல் ராகு, 8-ல் கேது, 12-ல் சூரியன்; புதன் இருப்பதால் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். விஷ பயம் உண்டாகும்.
அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. மக்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் சமாளிப்பீர்கள். 28-ம் தேதி முதல் நிலபுலங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்).
திசைகள்: வட கிழக்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும், 11-ல் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் திறமையால் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். எதிரிகள் அடங்குவார்கள்.
வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். மாதர்களது எண்ணம் ஈடேறும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். அலைச்சல் கூடும். அதிகம் உழைக்க வேண்டிவரும்.
புதிய பதவிகளும் பட்டங்களும் வந்து சேரும். வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகமாகும். சிக்கனம் தேவை. 28-ம் தேதி முதல் சொத்துகள் சேரவும் சொத்துகள் மூலம் ஆதாயம் பெறவும் வாய்ப்பு உண்டாகும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்பட்டு விலகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்), 26.
திசைகள்: தென் கிழக்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 6-ல் கேதுவும், 10-ல் சூரியனும்; புதனும் உலவுவது நல்லது. பொதுப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலாளர்கள், விவசாயிகளின் திறமை வீண்போகாது. ஆன்மிகவாதிகள், அறப் பணியாளர்கள், ஜோதிடர்களுக்கு வரவேற்பு கூடும்.
எதிரிகள் அடங்குவார்கள். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். செய்துவரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும்.
வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். 2-ல் செவ்வாயும், 12-ல் குரு; ராகுவும் உலவுவதால் குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. அக்கம்பக்கத்தாரிடமும் உடன்பணிபுரிபவர்களிடமும் சுமுகமாகப் பழகுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்), 26.
திசைகள்: வடக்கு, வட மேற்கு, கிழக்கு.
நிறங்கள்: பச்சை, மெரூன், வெண்மை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 5, 6, 7.
பரிகாரம்:துர்க்கைக்கு நெய்தீபமேற்றி, அர்ச்சனை செய்வது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT