Published : 20 Apr 2017 10:39 AM
Last Updated : 20 Apr 2017 10:39 AM
மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் வக்கிர புதனும் உலவுவது நல்லது. குரு 6-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். வார முன்பகுதியில் சந்திரபலமும் இருக்கிறது. இதனால் எடுத்த காரியங்கள் இனிது நிறைவேறும். நண்பர்கள் உதவுவார்கள். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். நிலபுலங்கள் லாபம் தரும். மாணவர்களது நிலை உயரும். வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகமாகும். என்றாலும் அவை பெரும்பாலும் சுபச் செலவுகளாகவே அமையும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். 23-ம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெற்று 12-ல் நேர்கதியில் உலவும் நிலை அமைவதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21. 24.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, இளநீலம். l எண்கள்: 1, 3, 6, 7.
பரிகாரம்: துர்க்கை அம்மனையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் கேதுவும் 11-ல் புதன், சுக்கிரன் ஆகியோரும் உலவுவது நல்லது. தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மக்களாலும், பெற்றோராலும் அனுகூலம் உண்டாகும். ஆன்மிகவாதிகள் வரவேற்பு பெறுவார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு செழிப்பு கூடும். மாதர்களது நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் வந்து சேரும். இதர கிரகங்களில் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எதிர்ப்புக்கள் இருக்கும். நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. உஷ்ணாதிக்கம் சம்பந்தமான தொந்தரவுகள் உண்டாகும். கூரிய ஆயுதங்கள், எரிபொருட்கள், மின்சாரம் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பு தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 24.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 7. l பரிகாரம்: ஆதித்தனை வழிபடுவது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் சனியும், 10-ல் புதனும் 11-ல் சூரியனும் உலவுவது சிறப்பாகும். வார முன்பகுதி சந்திராஷ்டமம் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. 22-ம் தேதி முதல் பொருளாதார நிலையில் முன்னேற்றம் காண வாய்ப்பு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். முக்கியஸ்தர்களின் தொடர்பு பயன்படும். செய்தொழிலில் வளர்ச்சி காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற இனங்கள் லாபம் தரும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். திரவப் பொருட்கள் லாபம் தரும். அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். புதிய முயற்சிகள் வாரப் பின்பகுதியில் நிறைவேறும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். மருத்துவர்கள் நற்பெயர் பெறுவார்கள்.
அதிர்ஷ்டமான தேதி: ஏப்ரல் 24.
திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு, பச்சை.
எண்கள்: 1, 4, 5, 6. l பரிகாரம்: மகா கணபதியை வழிபடுவது நல்லது.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் 11-ல் செவ்வாயும் உலவுவதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். இயந்திரப்பணிகள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களின் தொடர்பு பயன்படும். மேலதிகாரிகள் உங்களைப் போற்றுவார்கள். சிவப்பு நிறப்பொருட்கள் லாபம் தரும். சட்டம், காவல், ராணுவத் துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். நிலபுலங்களின் சேர்க்கை நிகழும். சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 21 (முற்பகல்), 24.
திசைகள்: கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, சிவப்பு, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 6, 9. l பரிகாரம்: விநாயகரை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் வக்கிர குருவும் 8-ல் சுக்கிரனும் 9-ல் சூரியனும், 10-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. எதிரிகளின் கரம் வலுக்குறையும். பிரச்சினைகள் எளிதில் தீரும். குடும்ப நலம் சிறக்கும். பண நடமாட்டம் அதிகமாகும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும். அரசுப்பணிகளில் அனுகூலமான போக்கு நிலவிவரும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு இப்போது கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். தான, தர்மப்பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். ஜன்ம ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் 4-ல் சனியும் இருப்பதால் கெட்டவர்களின் தொடர்பு கூடாது.
அதிர்ஷ்டமான தேதி: ஏப்ரல் 21.
திசைகள்: தெற்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, பொன் நிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 6, 9. l பரிகாரம்: நாகரை வழிபடுவது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் கேதுவும் உலவுவதால் எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும். பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும். ஆன்மிகவாதிகளுக்கு வரவேற்பு கூடும். 7-ல் புதனும் சுக்கிரனும் 8-ல் சூரியனும் இருப்பதால் வாழ்க்கைத் துணைவரால் சங்கடம் உண்டாகும். உஷ்ணாதிக்கத்தால் உபாதைகள் ஏற்படும். அரசியல்வாதிகளும், அரசுப்பணியாளர்களும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.
வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. தந்தை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். கண் உபத்திரவம் ஏற்படும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. 23-ம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெறுவதாலும், புதனும் சுக்கிரனும் ஒன்று சேர்வதாலும் தர்ம கர்மாதிபதி யோகம் அமைவதாலும் வாழ்க்கைத்துணை நலம் சீராகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 24.
திசைகள்: மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: கருநீலம், மெரூன்.
எண்கள்: 7, 8. l பரிகாரம்: சூரியனையும் குருவையும் வழிபடுவது நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT