Published : 16 Jun 2016 11:49 AM
Last Updated : 16 Jun 2016 11:49 AM
மேஷ ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சூரியனும் சுக்கிரனும் 5-ல்குருவும், 11-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்களும், தொழில் கூட்டாளிகளும் உதவுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.
தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். தந்தை நலம் சீராகும். மக்களால் முக்கியமான எண்ணங்கள் சில நிறைவேறும். 8-ல் செவ்வாயும் சனியும் வக்கிரமாக இருப்பதால் எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. உடல்நலனில் கவனம் தேவை. இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படவும். வாரப் பின்பகுதியில் தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 16, 20, 22.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பச்சை, பொன்நிறம்.l
எண்கள்: 3, 5, 6, 7.
பரிகாரம்: சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி அர்ச்சனை செய்யவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிசெய்யவும்.
ரிஷப ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். பெண்களுக்கு மனமகிழ்ச்சி கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும்.
கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். 19-ம் தேதி முதல் செவ்வாய் 6-ம் இடத்திற்கு மாறுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். 20-ம் தேதி முதல் புதன் 2-ம் இடத்திற்கு மாறி பலம் பெறுவதால் பண நடமாட்டம் அதிகரிக்கும். பேச்சாளர்களுக்கு வரவேற்பு கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைக்கும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 16, 22 (இரவு).
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன்,வெண்மை, இளநீலம்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: பராசக்தியை வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே!
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் ராகுவும், 6-ல் செவ்வாயும் சனியும் உலவுவது சிறப்பாகும். தோற்றப்பொலிவு கூடும். கலைஞானம் உண்டாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். பயண விடுதிகள், பயண ஏற்பாடுகள் செய்வோர் அதிக வருவாய் பெறுவார்கள்.
19-ம் தேதி முதல் செவ்வாய் வக்கிரமாக 5-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. குரு பலமும் இல்லாததால் மக்கள் நலம் பாதிக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். நெருக்கமான நண்பர்கள் கூட உங்களுக்கு சங்கடத்தைத் தருவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் அனுகூலமான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 16, 20, 22 (பகல்).
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: கறுப்பு, வெண்மை, இளநீலம்.
எண்கள்: 4, 6.
பரிகாரம்: திருமாலை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 2-ல்குருவும், 5-ல்செவ்வாயும், 11-ல் புதனும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவிபுரிவார்கள். நிலபுலங்கள் லாபம் தரும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். குடும்ப நலம் சிறக்கும். மக்களால் ஓரளவு நலம் உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்பு கூடிவரும்.
கலைஞர்களது நிலை உயரும். 2-ல் ராகுவும், 12-ல் சூரியனும் இருப்பதால் கண் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்க வேண்டிவரும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் தொல்லைகள் ஏற்படும். 19-ம் தேதி முதல் செவ்வாய் வக்கிர கதியில் 4-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. அலைச்சல் அதிகமாகும். 20-ம் தேதி முதல் புதன் 12-ம் இடத்திற்கு மாறுவதால் செலவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 16, 20, 22.
திசைகள்: வடகிழக்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பொன்நிறம், சிவப்பு, வெண்மை, இளநீலம்.
எண்கள்: 3, 5, 6, 9.
பரிகாரம்: சூரியனுக்கும் சனிக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே!
உங்கள் ராசிநாதன் சூரியன் 11-ல் உலவுவது சிறப்பாகும். புதன், சுக்கிரன் அனுகூலமாக உலவுவதால் முக்கியமான எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு உதவுவார்கள். அரசியல்வாதிகளுக்குச் செல்வாக்கு உயரும். வியாபாரம் பெருகும். புதிய முயற்சிகள் கைகூடும். கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். மாதர்களது நிலை உயரும். குடும்பத்தில் குதூகலம் கூடும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் வருவாய் வந்து சேரும். மாணவர்களது திறமை வெளிப்படும். தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் நலம் உண்டாகும். 19-ம் தேதி முதல் செவ்வாய் 3-ம் இடத்திற்கு மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். 20-ம் தேதி முதல் புதன் 11-ம் இடத்திற்கு மாறுவதும் விசேடமாகும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். வியாபார நுணுக்கம் தெரியவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 16, 20, 22.
திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, இளநீலம், வெண்மை.
எண்கள்:1, 5, 6.
பரிகாரம்: ஆஞ்சநேயர், கணபதி துர்க்கையை வழிபடவும்.
கன்னி ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல்செவ்வாயும் சனியும், 6-ல்கேதுவும் 10-ல் சூரியனும் உலவுவது நல்லது. புதன் 9-ல் உலவினாலும் சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் நலம் புரிவார். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பண நடமாட்டம் கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
இயந்திரப்பணிகள் லாபம் தரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். 19-ம் தேதி முதல் செவ்வாய் வக்கிரமாக 2-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலைதூக்கும்.
கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. 20-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் புதன் 10-ம் இடத்திற்கு மாறுவது விசேடமாகும். செய்தொழிலில் நல்ல வளர்ச்சி காணலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 16, 20, 22.
திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: பச்சை, மெரூன், இளநீலம், வெண்மை, ஆரஞ்சு.
எண்கள்:1, 5, 6, 7.
பரிகாரம்: குரு, ராகுவுக்கு பிரீதி செய்யவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT