Published : 07 Aug 2014 04:00 PM
Last Updated : 07 Aug 2014 04:00 PM

வார ராசிபலன் 07-08-2014 முதல் 13-08-2014 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் புதன், சுக்கிரன், 6-ல் ராகு உலவுவது சிறப்பு. மன மகிழ்ச்சி பெருகும். சுகானுபவம் உண்டாகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பு நிகழும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். மாணவர்களின் நிலை உயரும். பெண்களின் நோக்கம் நிறைவேறும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும்.

வெளியூர், வெளிநாட்டுத்தொடர்புடன் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய், சனி உலவுவதால் அலைச்சல் அதிகமாகும். கெட்டவர்களின் தொடர்பு கூடாது. கூட்டாளிகளிடம் விழிப்புத் தேவை. 8-ம் தேதி முதல் புதன் 5-ம் இடம் மாறுவதால் உடல் நலனில் கவனம் தேவை. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மக்களால் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 7, 10

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை, வெளிர் கறுப்பு

எண்கள்: 4, 5, 6

பரிகாரம்: சனிக்கு அர்ச்சனை செய்யவும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும். கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவி செய்யவும்.



ரிஷப ராசிக்காரர்களே

உங்கள் ஜன்ம ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் சனியும் 11-ல் கேதுவும் உலவுவதால் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். கலைஞர்களும் பெண்களும் முன்னேற்றம் காண்பார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியாளர்களின் நிலை உயரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு விசாரணைகளில் வெற்றி காணச் சந்தர்ப்பம் கூடிவரும்.

விளையாட்டு, விநோதங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் விருதுகளும் கிடைக்கும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு பிறக்கும். 8-ம் தேதி முதல் புதன் 4-ம் இடம் மாறுவதால் வியாபாரம் அபிவிருத்தி அடையும். மாணவர்களின் திறமை வெளிப்படும். 3-ல் குரு, 5-ல் ராகு உலவுவதால் பிள்ளைகள் நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 10, 13

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு

நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, நீலம், சிவப்பு

எண்கள்: 1, 6. 7, 8, 9

பரிகாரம்: துர்கை அம்மனை வழிபடவும். வேத விற்பன்னர்களுக்கு உதவவும்.



மிதுன ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் குருவும் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவதால் பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால் நன்மை உண்டாகும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் உருவாகும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள். ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், மேடைப் பேச்சாளர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோர் நிலை உயரப் பெறுவார்கள். தனவந்தர் சகாயம் கிடைக்கும். பெரியவர்களது ஆசிகளைப் பெற வாய்ப்பு உண்டாகும். 8-ம் தேதி முதல் புதன் 3-ம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. 4-ல் ராகுவும் 5-ல் செவ்வாய், சனி ஆகியோரும் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 7, 13

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு, வடக்கு

நிறங்கள்: இளநீலம், பச்சை, வெண்மை, மெரூன், பொன் நிறம், மஞ்சள்

எண்கள்: 3, 5, 6, 7

பரிகாரம்: துர்கைக்கும் சுப்பிரமணியருக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.



கடக ராசிக்காரர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரன், 3-ல் ராகு உலவுவதால் தோற்றப்பொலிவு கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கணவன்-மனைவி உறவு நிலை சீராகும். கூட்டாளிகள் உதவுவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். பயணம் சம்பந்தமான பணிகள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் தேடிவரும். பெண்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவும்.

ஜன்ம ராசியில் சூரியன், புதன், குரு ஆகியோர் உலவுவதால் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 4-ல் செவ்வாயும் சனியும் உலவுவதால் வீண் அலைச்சல் கூடும். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால் இடர்ப்பாடுகள் ஏற்படும். 8-ம் தேதி முதல் புதன் 2-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றமான பாதை புலப்படும். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால் வளர்ச்சி காணலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 7, 10

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெண்மை, சாம்பல் நிறம்

எண்கள்: 4, 6

பரிகாரம்: சூரியனுக்கும் சனிக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்தால் நல்லது.



சிம்ம ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், சனி, 12-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பு. துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு நிலவும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். வேலையாட்கள் சுமூகமாக நடந்து கொள்வார்கள்.

கலைஞர்களின் நிலை உயரும். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். 2-ல் ராகு, 8-ல் கேது, 12-ல் சூரியன், புதன், குரு ஆகியோரும் உலவுவதால் குடும்ப நலனில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள் ஆகியோர் கடமைகளைச் சரிவர ஆற்றிவந்தால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 7, 10

திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை

எண்கள்: 6, 8, 9

பரிகாரம்: சூரிய வழிபாடு அவசியம். கண் பார்வையற்றவர்களுக்கு உதவவும். துர்கை, விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.



கன்னி ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் சூரியன், புதன், குரு, சுக்கிர உலவுவதால் பல வழிகளில் ஆதாயம் கிடைத்துவரும். முக்கியஸ்தர்களது தொடர்பு பயன்படும். மூத்த சகோதர, சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைஞர்களின் நோக்கம் நிறைவேறும். பெண்களின் எண்ணம் ஈடேறும்.

ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். கடல் சார்ந்த தொழில் வளர்ச்சி பெறும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். 8-ம் தேதி முதல் புதன் 12-ம் இடம் மாறுவதால் வியாபாரிகள் விழிப்புடன் இருக்கவும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபடவேண்டாம். பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 7, 10

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை, ஆரஞ்சு, பொன் நிறம்

எண்கள்: 1, 3, 5, 6

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரையும் முருகனையும் வழிபடவும். ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x