Published : 27 Oct 2016 09:44 AM
Last Updated : 27 Oct 2016 09:44 AM

வார ராசிபலன் 27-10-2016 முதல் 02-11-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் 2-ல் இருக்கிறார். ராகு 11-ல் உலவுவது சிறப்பாகும். புதியவர்களின் நட்பும் அதனால் அனுகூலமும் பெறுவீர்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். இடமாற்றம் உண்டாகும். சுபச் செலவுகள் சற்று கூடும். ஜன்ம ராசியில் சூரியன் இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். புதன் ஜன்ம ராசியில் இருந்தாலும் தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். முக்கியமான காரியங்கள் நிறைவேற வாய்ப்பு கூடிவரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். விருந்து, உபசாரங்களில் ஈடுபடுவீர்கள். 5-ல் கேதுவும், 12-ல் குருவும் உலவுவதால் மக்கள் நலனில் அக்கறை தேவை. ஊகவணிகத்தில் அதிக ஆதாயமிராது. மனக்குழப்பம் ஏற்படும். மறதியால் அவதிப்படுவீர்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 30, நவம்பர் 2.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், இளநீலம். எண்கள்: 4, 6.
பரிகாரம்: குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும். சூரிய நமஸ்காரம் செய்யவும்.



விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் பலம் மிகுந்த செவ்வாயும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். புதிய முயற்சிகள் கைகூடும். செயலில் வேகம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நிலபுலன்கள் லாபம் தரும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு ஆசிபுரிவதுடன் ஆதரவாகவும் இருப்பார்கள். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.

போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும். மக்களாலும், உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். வார முன்பகுதி மிகச் சிறப்பாகவே அமையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 28, நவம்பர் 2.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 4, 6, 9. பரிகாரம்: சூரியன், சனி ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.



தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 11-ல் சூரியனும் புதனும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். எடுத்த காரியங்களில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். நல்லவர் அல்லாதவர்களை விட்டு விலகுவது நல்லது. ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை வெளிப்படும்.

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் லாபம் வரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானத் துறையினர் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு நலம் உண்டாகும். நவம்பர் 1,2 தேதிகளில் செலவுகள் அதிகமாகும். சிக்கனம் தேவை. இடமாற்றம், நிலைமாற்றம் ஏற்படும். மனதில் சலனம் உண்டாகும். குடும்ப நலனில் அக்கறை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 28, 30.
திசைகள்: வடமேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு, பச்சை, இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 5, 6, 7. பரிகாரம்: சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யவும்.



மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் குருவும் 10-ல் சூரியனும் புதனும் 11-ல் சுக்கிரனும் சனியும் உலவுவது சிறப்பாகும். புனித காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சாது தரிசனம் கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். மக்களால் மகிழ்ச்சி ஏற்படும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும்.

நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். புதிய பதவி, பட்டங்கள் பெற வாய்ப்பு கூடிவரும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஆதாயம் கிடைத்துவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 28, 30, நவம்பர் 2.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 6, 8. பரிகாரம்: விநாயகரையும், துர்க்கையையும் வழிபடவும். நாக வழிபாடு அவசியம்.



கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் சனி உலவுவது சிறப்பாகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயனைப் பெற்று வருவீர்கள். பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகைகளில் லாபம் கிடைக்கும். இதர கிரகங்களின் சஞ்சாரம் கோசாரப்படி சிறப்பாக இல்லாததால் கோபத்தைக் குறைத்துக் கொண்டு அன்புடன் பழகவும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. பொருளாதாரம் தொடர்பான காரியங்களில் அதிக கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிரச்சினைகள் சூழும். மக்களால் மன அமைதி குறையும். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவைப்படும். தொழில் ரீதியாக இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். தொழில் அதிபர்கள் புதிய துறைகளில் அதிக முதலீடு செய்ய இந்த நேரம் சிறப்பானதாகாது. உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 30, நவம்பர் 2.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், பச்சை. எண்கள்: 5, 6, 8.
பரிகாரம்: நாக பூஜை செய்யவும். குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.



மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 7-ல் குருவும் 8-ல் புதனும் 9-ல் சுக்கிரனும் 11-ல் செவ்வாயும் உலவுவதால் எதிர்ப்புகளின் கரம் வலுக் குறையும். வழக்குகளில் வெற்றி காணலாம். பயணத்தால் அனுகூலம் உண்டு. வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பொருள்வரவு கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் உண்டாகும்.

கூட்டுத் தொழில் லாபம் தரும். தொழில்நுட்பத் திறமை வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானம், தரகுத் துறைகள் ஆக்கம் தரும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 28, நவம்பர் 2.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகை நிறம், பொன் நிறம், சிவப்பு, இளநீலம், வெண்மை.
எண்கள்: 3, 4, 5, 6, 9. பரிகாரம்: சூரியனை வழிபடவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x