Published : 20 Apr 2017 10:39 AM
Last Updated : 20 Apr 2017 10:39 AM

வார ராசிபலன் 20-04-2017 முதல் 26-04-2017 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல் ராகுவும், 12-ல் வக்கிர குருவும் உலவுவது நல்லது. நண்பர்கள் நலம் புரிய முன்வருவார்கள். எடுத்த காரியத்தில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். 2-ல் சனியும் 8-ல் செவ்வாயும் இருப்பதால் குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். சண்டை, சச்சரவுகள் அதிகரிக்கும். சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். இயந்திரங்களில் பணிபுரியும்போதும் விளையாட்டுகளில் ஈடுபடும்போதும் பாதுகாப்பு தேவை. உடன்பிறந்தவர்களால் மன அமைதி கெடும். 6-ல் சுக்கிரனும் 7ல் சூரியனும் இருப்பதால் கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். பெண்களால் சங்கடம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் அதிக கவனம் தேவை. 23-ம் தேதி முதல் புதன் வக்கிர நிவர்த்தி பெற்று 6-ல் உலவும் நிலை அமைவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை துறைகள் ஆக்கம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 24.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், பொன் நிறம்.

எண்கள்: 3, 4. l பரிகாரம்: கணபதியையும் மகாலட்சுமியையும் வழிபடவும்.



விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது நல்லது. நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். அரசு உதவி கிடைக்கும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்பு கூடிவரும். தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். பயணம் சார்ந்த தொழில் லாபம் தரும். பொருளாதார நிலை உயரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். சுப காரியங்கள் நிகழும். ஜன்ம ராசியில் சனியும், 4-ல் கேதுவும், 7-ல் செவ்வாயும் உலவுவதால் உடல் நலம் ஒருநாள் போல் மறுநால் இராது. அதிகம் உழைக்க வேண்டிவரும். உடல் அசதி ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 24.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், சிவப்பு

எண்கள்: 1, 3, 4, 6. l பரிகாரம்: விநாயகரை வழிபட்டு எதிலும் ஈடுபடவும்.



தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் சுக்கிரனும் 5-ல் சூரியனும் 6-ல் செவ்வாயும், 10-ல் வக்கிர குருவும் உலவுவது நல்லது. துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிரிகள் விலகிப் போவார்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். போட்டி பந்தயங்களிலும் விளையாட்டுகளிலும் வெற்றி காண வாய்ப்பு கூடிவரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய வீடு, நிலம், மனை, வாகனங்களின் சேர்க்கை நிகழும். சொத்துக்களால் ஆதாயமும் அதிகம் கிடைக்கும். மக்களால் பெற்றோருக்கும் பெற்றோரால் மக்களுக்கும் அனுகூலம் உண்டாகும். பூர்விகத் தொழில் சிறப்பாக அமையும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பொறியாளர்களது நிலை உயரும். பொருள்வரவு திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பங்கு வர்த்தகம் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 24.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 6, 7, 9. l பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும்.



மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நல்ல காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பெரியவர்கள், தனவந்தர்கள் தொடர்பு பயன்படும்.

பொது நலப்பணிகளில் ஆர்வம் அதிகமாகும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், கச்சாப் பொருட்கள் மூலம் லாபம் கிடைத்து வரும். 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் 4-ல் சூரியனும் 5-ல் செவ்வாயும் உலவுவதால் வீண் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21, 24

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை. | எண்கள்: 6, 8.

பரிகாரம்: 8-ல் உலவும் ராகுவுக்காக துர்க்கையையும் விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும்.



கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. குரு 8-ல் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். வார ஆரம்பத்தில் எதிர்பாராத செலவுகள், இழப்புகளைச் சந்திக்க வேண்டிவரும். விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். மருத்துவச் செலவுகள் கூடும். 23-ம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பொருளாதார நிலை உயரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்; பேச்சாற்றல் கூடும். திரவப் பொருட்கள் லாபம் தரும். எதிரிகள் அடங்குவார்கள். அரசுப்பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதி: ஏப்ரல் 24.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, ஆரஞ்சு. l எண்கள்: 1, 3, 5, 6, 8.

பரிகாரம்: நாக பூஜை செய்வது நல்லது. கணபதி, துர்க்கை ஜப, ஹோமம் செய்வதும் சிறப்பாகும்.



மீன ராசி வாசகர்களே

ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் செவ்வாயும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். தோற்றப்பொலிவு கூடும். கலைத்துறை ஊக்கம் தரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ ஆதாயமோ கிடைக்கும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். போட்டிப் பந்தயங்களிலும் வழக்குகளிலும் வெற்றி பெறச் சந்தர்ப்பம் உருவாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். நிலபுலங்கள் சேரும். மக்களால் எண்ணம் நிறைவேறும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். சூரியன், புதன், சனி, கேது ஆகியோர் அனுகூலமாக இல்லாததால் பேச்சில் நிதானம் தேவை. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 21 (முற்பகல்), 24.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 4, 6, 9. l பரிகாரம்: கணபதியையும் மகாவிஷ்ணுவையும் வழிபடவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x