Published : 02 Feb 2017 10:09 AM
Last Updated : 02 Feb 2017 10:09 AM
மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 7-ல் குருவும் 10-ல் சூரியனும், புதனும் 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் செலவு செய்வீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்லவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார நிலை உயரும். உடன்பிறந்தவர்களுக்காகவும் வாழ்க்கைத்துணைவருக்காகவும் செலவு செய்வீர்கள். குடும்ப நலம் சீராகும். பேச்சாற்றல் கூடும்.
முக்கியப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். நல்ல இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு வாய்ப்புக்கள் கூடிவரும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். ஆன்மிகப்பணிகளில் நாட்டம் அதிகமாகும். தகவல் தொடர்பு பயன்படும். வியாபாரம் பெருகும். 5-ல் ராகுவும் 8-ல் சனியும் 12-ல் செவ்வாயும் இருப்பதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும். கடுமையாக உழைக்க வேண்டிவரும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் தேவையற்ற தொடர்புக்கும் இடம் தரலாகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 2, 3, 6, 8 (பிற்பகல்).
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், பொன் நிறம், ஆரஞ்சு, பச்சை.
எண்கள்: 1, 3, 5, 6, 7.
பரிகாரம்: செவ்வாய், ராகு, சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும் 11-ல் செவ்வாயும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். ஆன்மிகப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். போட்டிப் பந்தயங்களிலும், விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிடைக்கும். திரவப்பொருட்கள் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குறுக்கீடுகளும் தடைகளும் விலகும். புதிய ஆடைகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கையும் அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். நிலபுலங்கள் சேரும்.
சட்டம், காவல், ராணுவத் துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். குரு பலம் இல்லாததாலும் 4-ல் ராகுவும் 7-ல் சனியும் உலவுவதாலும் பெரியவர்களிடம் பணிவு தேவை. கெட்டவர்களின் தொடர்பு அடியோடு கூடாது. பொருள் கொடுக்கல் வாங்கலில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. சிக்கன நடவடிக்கை தேவை. வீண் அலைச்சலைக் குறைத்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 2, 6, 8 (பிற்பகல்).
திசைகள்: வடமேற்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 6, 7, 9.
பரிகாரம்: பெற்றோரையும் குரு ஸ்தானத்தில் உள்ளவர்களையும் வணங்கி, அவர்களது நல்வாழ்த்துக்களைப் பெறவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 5-ல் குருவும் 6-ல் சனியும் 8-ல் புதனும் 10-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுப் பயன் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் நலம் உண்டாகும். திரவப் பொருட்கள் லாபம் தரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். நிலபுலங்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைத்துவரும். தெய்வப் பணிகள் நிறைவேறும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்குறையும். வழக்கில் அனுகூலமான திருப்பம் உண்டாகும்.
விளையாட்டு விநோதங்களில் வெற்றி கிடைக்கும். பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பொன்னும் பொருளும் சேரும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். மகன் அல்லது மகளுக்கு வேலை வாய்ப்பு அமையும். 8-ல் சூரியனும் 9-ல் கேதுவும் இருப்பதால் தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். அரசுப்பணியாளர்கள், அரசியல்வாதிகள், நிர்வாகிகள் ஆகியோர் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 2, 3, 6, 8 (பிற்பகல்).
திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 4, 5, 6, 8, 9.
பரிகாரம்: சூரியனையும் கேதுவையும் வழிபடவும். பித்ரு கடன் ஆற்றுவது அவசியம்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன் உலவுவது நல்லது. சந்திரனும் 6-ம் தேதி வரை அனுகூலமாக உலவுகிறார். தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் சேரும். நிலபுலங்கள் லாபம் தரும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். தான, தர்மப்பணிகளில் ஈடுபடுவீர்கள். தாய் நலம் சீராக இருந்துவரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். கலைத்துறையினருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பெண்களால் அனுகூலம் உண்டாகும்.
செய்தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். இதர கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் குடும்பத்தில் அமைதி குறையும். மக்களால் செலவுகள் ஏற்படும். மறதியால் அவதி உண்டாகும். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். விஷ பயம் ஏற்படும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும். பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகிவருவது நல்லது. பொருள் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 2, 3, 6.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, சிவப்பு.
எண்கள்: 6, 9.
பரிகாரம்: பராசக்தியை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும், புதனும், 8-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். மறைந்த மற்றும் தொலைந்த பொருள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். மாதர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். தந்தையால் நலம் உண்டாகும். செய்தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும்.
அலைச்சல் சற்று அதிகரிக்கவே செய்யும். அதனால் உடல் சோர்வு ஏற்படும். புதியவர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. 4-ல் சனியும் 8-ல் செவ்வாயும் இருப்பதால் உடலில் காயம்பட நேரலாம். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. உடன்பிறந்தவர்களாலும், நண்பர்களாலும் பிரச்சினைகள் ஏற்படும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. குரு பலம் குறைந்திருப்பதால் பொருளாதாரப் பிரச்சினை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வாரப் பின்பகுதியில் வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். முக்கியமான ஒருகாரியம் நிறைவேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 3, 6, 8 (பிற்பகல்).
திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை, இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 5, 6.
பரிகாரம்: குல தெய்வத்துக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் சனியும், 6-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பொருளாதார நிலை உயரும். பேச்சில் திறமை கூடும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். ஆன்மிகப்பணிகள் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். நிலபுலங்கள் மூலம் வருவாய் கிடைக்கும். தொழிலாளர்கள், விவசாயிகள், பொது நலப்பணியாளர்கள், உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். மந்திர, தந்திர, யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
ஜோதிடர்களுக்கு வரவேற்பு கூடும். மக்களால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். 7-ல் செவ்வாயும் சுக்கிரனும் 12-ல் ராகுவும் உலவுவதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக்கொடுத்துப் பழகி வருவது நல்லது. பயணத்தின்போது விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருப்பது நல்லது. சுகம் குறையும். காது, கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 2, 6, 8 (பிற்பகல்).
திசைகள்: மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: நீலம், மெரூன், பொன் நிறம்.
எண்கள்: 3, 7, 8.
பரிகாரம்: துர்க்கைக்கும் சுப்பிரமணியருக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT