Published : 27 Apr 2017 10:14 AM
Last Updated : 27 Apr 2017 10:14 AM
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் புதனும் 11-ல் ராகுவும் உலவுவது நல்லது. வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேற வழி பிறக்கும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறையினர் வளர்ச்சி காண்பார்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். புதியவர்களின் நட்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். 8-ல் செவ்வாய் இருப்பதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்; எச்சரிக்கை தேவை. உடன்பிறந்தவர்களுக்கும் உங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. 7-ல் சூரியனும் 6-ல் சுக்கிரனும் இருப்பதால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையும். சண்டை, சச்சரவுகள் அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் பழகுவது அவசியமாகும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 30, மே 1 (பிற்பகல்).
திசைகள்: தென்மேற்கு, வடக்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை. l எண்கள்: 4, 5.
பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடுங்கள்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். பிரச்சினைகள் எளிதில் தீரும். மதிப்பு உயரும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உதவுவார்கள். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவி உறவு நிலை திருப்தி தரும். தெய்வப் பணிகள் நிறைவேறும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். ஜன்ம ராசியில் சனியும் 4-ல் கேதுவும் உலவுவதால் உடல் நலனில் கவனம் தேவை. நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, மே 2.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், சிவப்பு, வெண்மை.
எண்கள்: 1, 3, 4, 6. l பரிகாரம்: விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் புதனும் சுக்கிரனும் 5-ல் சூரியனும் 6-ல் செவ்வாயும், உலவுவது நல்லது. மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். மக்களால் அனுகூலம் உண்டாகும். தந்தை நலம் சீராகும். வழக்குகளிலும் போட்டி பந்தயங்களிலும் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பொறியாளர்களது நிலை உயரும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் கிடைக்கும். நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான பாதை தெரியவரும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் லாபம் உண்டு. வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, 30, மே 1 (பிற்பகல்).
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, தெற்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு.
எண்கள்: 1, 5, 6, 7, 9. l பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. அலைச்சல் கூடினாலும் அதற்கான பயன் கிடைத்துவரும். மக்களால் பெற்றோருக்கும் பெற்றோரால் மக்களுக்கும் நலம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். பொது நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்குவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் உலவுவதால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. புதன் 3-ல் இருப்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, 30, மே 1 (பிற்பகல்).
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 8. l பரிகாரம்: நாகேஸ்வரரையும் திருமாலையும் வழிபடுங்கள்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. முக்கியமான தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். நிலபுலங்களால் பயன் கிடைத்துவரும். குடும்ப நலம் திருப்தி தரும். கேளிக்கை, உல்லாசங்களிலும் விருந்துகளிலும் ஈடுபாடு கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். பண நடமாட்டம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். செய்தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறையினர் வளர்ச்சி காண்பார்கள். ஜன்ம ராசியில் கேதுவும், 7-ல் ராகுவும், 8-ல் குருவும் இருப்பதால் மக்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, 30, மே 1 (பிற்பகல்).
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, ஆரஞ்சு, பச்சை. l எண்கள்: 1, 5, 6, 8.
பரிகாரம்: நாகரை வழிபடுங்கள். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி அவர்களது நல்லாசிகளைப் பெறவேண்டும்.
மீன ராசி வாசகர்களே
ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் செவ்வாயும், 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புக்கள் அடங்கும். போட்டிகளில் விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். உடல் நலம் சீராக இருந்துவரும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதியவர்களின் நட்பு கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். அரசு மூலம் கேட்டிருந்த கடன் கிடைக்கும். தெய்வப் பணிகள் நிறைவேறும். நண்பர்களும் உறவினர்களும் அளவோடு உதவுவார்கள். வாரப் பின்பகுதியில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, 30, மே 1 (பிற்பகல்).
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, சிவப்பு.
எண்கள்: 3, 4, 6, 9. l பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபடுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT