Last Updated : 20 Sep, 2018 11:19 AM

 

Published : 20 Sep 2018 11:19 AM
Last Updated : 20 Sep 2018 11:19 AM

மெய்வழி 01: சாய்பாபாவுக்கு முதல் இதழ்

ஷிர்டி சாய்பாபாவின் அற்புதங்களையும் மகிமைகளையும் பிரச்சாரம் செய்வதற்காக 2002 மே சித்ரா பெளர்ணமி முதல் ‘ஸ்ரீ சாயிமார்க்கம்’ என்னும் ஆன்மிக மாத இதழ் தொடங்கப்பட்டது. ஷிர்டி சாய்பாபாவுக்காக இப்படி ஒரு இதழ் அதிலும் குறிப்பாக, தமிழில் தொடங்கப்பட்டது இதுவே முதல் முறை என்கிறார் இதன் ஆசிரியர் எஸ். லெக்ஷ்மிநரசிம்மன். அதற்கு முன்னர் வெளிவந்த 'ஷிர்டி சமஸ்தானத்து சாயிலீலா’ போன்ற இதழ்கள் சாயிபாபா ஆரத்தி மற்றும் பாடல்களைக் கொண்ட புத்தக வடிவிலேயே வெளிவந்தன.

‘ஸ்ரீ சாயிமார்க்கம் இதழ்’ மட்டுமே லே அவுட், ஃபோட்டோக்கள், அட்டை வண்ணப்படம், பேட்டிகள், தொடர்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள் மற்றும் தீபாவளி மலர் என ஒரு முழுப் பத்திரிகைக்குரிய அம்சங்களுடன் தொடங்கப் பட்டது. வெகுஜன இதழ்களைப் போலவே ஷிர்டி, பாண்டிச்சேரி, பெங்களூரு, கோயம்புத்தூர் சிறப்பிதழ்களையும் வெளியிட்டது.

ஷிர்டி சாய்பாபா ஆலயங்களுக்கும் அதன் பக்தர்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகவும் ‘ஸ்ரீ சாயிமார்க்கம்' வெளிவருகிறது. 

இதன் ஆசிரியர் எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன் தமிழ்ப் பத்திரிகை, தொலைக் காட்சித் துறையில் சுமார் 30 ஆண்டு கால அனுபவம் உடைய எழுத்தாளர். இவர் கவிதை,சிறுகதை,விமர்சனம், பேட்டிகள் உள்ளிட்ட சுமார் 15 நூல்களையும் சாயிபாபா தொடர்பான சுமார் 15 புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

தற்போது பச்சைநிறக் கல்லில் சாயிபாபா சிலையை வைத்து அவருக்கு சென்னை ஊரப்பாக்கத்தில் தனி ஒரு ஆலயம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளாக ‘ஸ்ரீ சாயிமார்க்கம்' காலாண்டிதழாக வெளிவருகிறது. ஆண்டு  தோறும் தீபாவளி மலரும் வெளிவருகிறது.ஸ்ரீ சாயிமார்க்கம்

ஸ்ரீ சாயிமார்க்கம்

தனி இதழ் விலை ரூ.15/- | ஆண்டு சந்தா ரூ.250/-

(தீபாவளிமலர் உட்பட)

ஆசிரியர் : எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன்

8,பாபு ராஜேந்திர பிரசாதத் (இரண்டாம் தெரு ரயில்வே பார்டர்,) மேற்கு மாம்பலம்

சென்னை – 33

தொலைபேசி : 044- 2371 2195

 

(வாசகர்களே, உங்கள் ஊரில் பக்தி, ஆன்மிக மார்க்கங்கள் சார்ந்து தமிழில் வெளிவரும் சமய, சித்தாந்தப் பத்திரிகைகளை அறிமுகப்படுத்தும் பகுதி இது. பத்திரிகை தொடங்கிய ஆண்டு, நோக்கம், இதுவரையிலான இதழ்கள் குறித்த குறிப்புகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு நீங்களும் எங்களுக்கு ஒரு அறிமுகத்தை எழுதி அனுப்பலாம்.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x