Last Updated : 28 Mar, 2018 10:53 AM

 

Published : 28 Mar 2018 10:53 AM
Last Updated : 28 Mar 2018 10:53 AM

வாழ்வை வளமாக்கும் குருவார பிரதோஷம்!

பங்குனியின் குருவாரத்தில், அதாவது வியாழக்கிழமையில் பிரதோஷ பூஜையைத் தரிசியுங்கள். குடும்பத்தில் எல்லா சத்விஷயங்களும் நடந்தேறும். இனிமையாகவும் குதூகலத்துடனும் வாழ்வீர்கள். நாளை வியாழக்கிழமை 29.3.18 பிரதோஷம்.

நலமும் வளமும் தரும் பங்குனி மாதத்தில், பிரதோஷ பூஜையை தரிசிப்பதும் அப்போது சிவனாரை மனமொன்றிப் பிரார்த்தனை செய்வதும் விசேஷத்திற்கு உரியது. மிகுந்த நன்மைகளை வாரிவழங்கக் கூடியது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

குறிப்பாக, பங்குனி மாதத்தில், குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில், மாலைவேளையில், அருகில் உள்ள சிவாலயத்திற்குச் செல்லுங்கள். நந்திதேவர், சிவபெருமான், குருவாரம் என்பதால் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான், கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி முதலானோரை கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

மாலை 4.30 முதல் 6 மணி வரை என்பது பிரதோஷ நேரம். இந்த சமயத்தில், சிவாலயத்தில் உள்ள நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். முடிந்தால், சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலான அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள்.

அதேபோல், செவ்வரளி, வில்வம், அருகம்புல் கொண்டு நந்திதேவருக்குச் சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள்.

குருவார பிரதோஷத்தில் மறக்காமல் தரிசனம் செய்யுங்கள். அபிஷேகப் பொருட்களும் பூக்களும் வழங்குங்கள். இன்னும் இயலுமெனில், தயிர்சாதம் விநியோகம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையையே குளிரப்பண்ணுவார் சிவனார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x