Last Updated : 07 Mar, 2018 12:46 PM

 

Published : 07 Mar 2018 12:46 PM
Last Updated : 07 Mar 2018 12:46 PM

சரஸ்வதிதேவியை வணங்கினால் கல்வியில் வெற்றி நிச்சயம்!

கல்விக்கு அதிபதி சரஸ்வதிதேவி. கல்விக் கடவுள் என்று போற்றி வணங்குகின்றனர் பக்தர்கள். சரஸ்வதிதேவியை தினமும் மனதாரப் பிரார்த்தனை செய்து வந்தாலே, புத்தியில் தெளிவு நிச்சயம். மனதில் பயமோ குழப்பமோ இருக்காது. தெளிந்த நீரோடையாய் மனது இருக்க... படிப்பவை யாவும் பசுமரத்தாணிதான். ஆகவே தேர்வில் வெற்றி பெறுவது ஈஸி. அதிக மதிப்பெண் எடுப்பது சுலபம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சுராசுர சேவித பாத பங்கஜா

கரே விராஜத் கமனீய புஸ்தகா

விரிஞ்சி பத்னீ கமலாசனஸ் திதா

சரஸ்வதீ ந்ருத்யது வாசி மே சதா

அதாவது, தாமரையில் வீற்றிருப்பவளும், தேவர்கள் வணங்கும் பாதக் கமலங்களை உடையவளும், அழகிய புத்தகத்தை கரத்தில் கொண்டவளும், ஸ்ரீபிரம்மதேவரின் துணைவியுமான சரஸ்வதி தேவியே... என் வாக்கில் மகிழ்ந்து தங்குவாய்! எனும் இந்த ஸ்லோகத்தை, தினமும் சொல்லுங்கள். முடிந்தபோதெல்லாம் சொல்லுங்கள்! ஞானமும் தெளிவும் கிடைக்கப் பெறுவீர்கள். தேர்வில் வென்று வாகை சூடுவீர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x