Last Updated : 09 Mar, 2018 09:42 AM

 

Published : 09 Mar 2018 09:42 AM
Last Updated : 09 Mar 2018 09:42 AM

பல்லாயிரம்..!

வைஷ்ணவ திருத்தலங்களில், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தனியிடம் உண்டு. விஷ்ணு சித்தர் என்று போற்றப்படும் பெரியாழ்வாரும் ஸ்ரீஆண்டாளும் அவதரித்த திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர்!

ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த பெரியாழ்வார் மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசு பெற்றார். பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி, இப்பரிசை கிடைக்கச் செய்தார். இந்தக் காட்சியை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் தரிசித்தனர். மக்களின் கண் பெருமாள் மீது பட்டு அவருக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ, அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என பெரியாழ்வார் பயந்துபோனாராம். பக்தியின் உயர்நிலை இது. எனவே, அவர் பல்லாண்டு வாழ வேண்டும் எனக் கருதி,”பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு” என்று துவங்கி “திருப்பல்லாண்டு” பாடினார். இந்த உயர்ந்த பக்தியை மெச்சிய பெருமாள், “நீரே பக்தியில் பெரியவர்” என வாழ்த்தினார்.

அதுவரை, விஷ்ணு சித்தர் என்று அழைக்கப்பட்டவர், பெரியாழ்வார் எனும் திருநாமம் பெற்றார். இந்தப் பல்லாண்டு பாடலே உலகம் முழுவதும் உள்ள திருமால் கோயில்களில் இன்றைக்கும் தினந்தோறும் பாடப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து, ரங்கமன்னாரையும் ஆண்டாளையும் தரிசிக்கும் போது, பெரியாழ்வாரையும் மனதார வேண்டுங்கள். குருவுக்கு குருவாக இருந்து நம்மை வழிநடத்துவார். ஆசீர்வதிப்பார். அருள்பாலிப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x