Last Updated : 01 Mar, 2018 09:12 AM

 

Published : 01 Mar 2018 09:12 AM
Last Updated : 01 Mar 2018 09:12 AM

மாசி மக நாளில்... தீர்த்த நீராடல்! குலம் தழைக்க தானம் செய்வோம்!

கும்பகோணம் மகாமகக் குளத்தில் மொத்தம் 19 தீர்த்தங்கள் உள்ளன. இதனால்தான் இந்த மகாமகக் குளம் புண்ணியம் நிறைந்ததாகப் போற்றுகின்றன புராணங்கள் என்று சொல்லிச் சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யர்கள். இந்த நாளில், தீர்த்த நீராடுவது புண்ணியம். அதைவிட தான தருமங்கள் செய்வது அதைவிட புண்ணியம் என்கிறார்கள். !

வாயு தீர்த்தம், கங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், யமுனை தீர்த்தம், குபேர தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், ஈசான்ய தீர்த்தம், நர்மதை தீர்த்தம், இந்திர தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அக்னி தீர்த்தம், காவிரி தீர்த்தம், யமன் தீர்த்தம், குமரி தீர்த்தம், நிருதி தீர்த்தம், பயோடினி தீர்த்தம், தேவ தீர்த்தம், வருண தீர்த்தம், சரயு தீர்த்தம்.

வாயு தீர்த்தத்தில் நீராடினால் தீராத நோயும் நீங்கும். கங்கா தீர்த்தத்தில் நீராடினால், இந்த ஜென்மத்தை அமைதியான முறையில் கடைத்தேற்றலாம். பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால், பித்ருக்களின் பாவங்கள் தொலையும்.

யமுனா தீர்த்தத்தில் நீராடினால், தங்கம், வெள்ளி முதலான ஆபரணங்கள் சேரும். குபேர தீர்த்தத்தில் நீராடினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். கோதாவரி தீர்த்தத்தில் நீராடினால், விரும்பியபடி வாழ்க்கைத் துணை, தொழில், உத்தியோகம் நடைபெறும்.

ஈசான்ய தீர்த்தத்தில் நீராடினால், இறைவனின் திருவடியை அடையலாம். நர்மதை தீர்த்தத்தில் நீராடினால், ஆரோக்கியம் கூடும். இந்திர தீர்த்தத்தில் நீராடினால், நிம்மதியான வாழ்க்கை நிச்சயம்! சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால், கல்வியும் ஞானமும் கிடைக்கும்.

அக்னி தீர்த்தத்தில் நீராடினால், பிரம்மஹத்தி முதலான தோஷங்கள் நீங்கும். காவிரி தீர்த்தத்தில் நீராடினால், சந்தான பாக்கியம் கிடைக்கும். சந்ததி சிறக்கும். யமன் தீர்த்தத்தில் நீராடினால், எம பயம் விலகும். நீண்ட ஆயுள் கைகூடும்!

குமரி தீர்த்தத்தில் நீராடினால், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நிருதி தீர்த்தத்தில் நீராடினால், திருஷ்டி விலகும். மனோபயம் நீங்கும். பயோடினி தீர்த்தத்தில் நீராடினால், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

தேவ தீர்த்தத்தில் நீராடினால், ஆயுள் நீடிக்கும். கடனின்றி வாழலாம். வருண தீர்த்தத்தில் நீராடினால், காடு கரையெல்லாம் செழிக்கும். நீர்நிலைகள் நிரம்பும். சரயு தீர்த்தத்தில் நீராடினால், நிம்மதியும் சந்தோஷமுமான வாழ்க்கை நிச்சயம்! இன்றைய நாளில், முடிந்த அளவு தானம் செய்யுங்கள்/. உணவுப் பொட்டலம் வழங்குங்கள். ஆடை தானம் செய்யுங்கள். இயலாதோருக்கு போர்வை வழங்குங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x