Published : 13 Mar 2018 02:06 PM
Last Updated : 13 Mar 2018 02:06 PM
கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் தீர்க்க ஆயுளுக்காகவும் செய்யப்படும் காரடையான் நோன்பு, நாளைய தினம் 14.3.18 புதன்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.
நாளைய தினத்தில், காரடையான் நோன்பு கடைப்பிடிக்க வேண்டிய, பூஜை செய்யவேண்டிய நேரம் : நாளை இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை.
இந்த நேரத்தில் பெண்கள், பூஜை செய்து வழிபட்டு, அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து, சரடு அணிந்து கொண்டு, பிரார்த்தனை செய்யவேண்டும்.
இந்த பூஜையின் போது, சொல்லவேண்டிய ஸ்லோகம்:
தோரம் க்ரஹணாமி ஸூபகே
ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம்
ஸூப்ரீதா பவ ஸர்வதா:
அதாவது, ‘கணவர் நீண்ட காலம் நோய்நொடியில்லாமல் வாழ்வதற்காக, நான் இந்தக் காரடையான் நோன்பு விரத்ததை மேற்கொள்கிறேன். காமாட்சி அன்னையே, நின்னருளால், சரடும் அணிந்துகொண்டேன். என் கணவரைக் காத்தருளும் தெய்வம் நீயம்மா. என்றும் காத்தருள்வாய் அன்னையே!’ என்று அர்த்தம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT