Published : 04 Oct 2018 11:49 AM
Last Updated : 04 Oct 2018 11:49 AM
`சாதுளரா மீரு ரண்டிபக்துளரா மீரு ரண்டிபாண்டுரங்கன சேவித்தமோ.. பாண்டுரங்கா பாண்டுரங்கா...ரண்டி பாண்டுரங்கா..’`ரா..ரா... நா வெண்ணமுத்து கோபாலா...கோபாலா கோபாலா கோவிந்த கோபாலா...’-
இரண்டு கைகளிலும் சப்ளாகட்டையைத் தட்டியபடி தன்னை மறந்து மந்திர ஸ்தாயியிலும் உச்ச ஸ்தாயியிலும் பாடும் மாத்மிகாவின் குரலும் இணைந்துபாடும் குழந்தைகளின் குரலும் மெலிதாகப் பின்னணியில் ஒலிக்கும் ஹார்மோனியமும், மிருதங்கத்தின் தாளமும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அவர்களோடு சேர்ந்து நம்மையும் பாடவைக்கின்றன. இதுதான் பஜனை பத்ததியின் சிறப்பு.திருமலையில் இந்தாண்டு வாரி வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி பல நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் விட்டல் மாத்மிகா குழுவினரின் நாமசங்கீர்த்தன பஜனைப் பாடல்களை, வேங்டேஸ்வர பக்தி சேனல் 'நாமம் திவ்ய நாமம்’ என்னும் தலைப்பின்கீழ் யூடியூபில் பதிவேற்றியிருக்கின்றனர்.நாராயண நாமத்தைச் சொல்லி பக்தன் ஒரு அடி எடுத்துவைத்தால் நாராயணன் பத்து அடிகள் பக்தனை நோக்கி எடுத்துவைப்பான் என்பார்கள். ஆனால், பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மாத்மிகாவுடன் இணைந்து பாடுவதை அந்த நாராயணனே பக்தர்களோடு பக்தனாகச் சேர்ந்து கேட்டிருப்பான் என்று தோன்றுகிறது.
உலகளாவிய பக்தி ரசிகர்கள்
சென்னையைச் சேர்ந்த விட்டல் மாத்மிகா குழுவினரின் நாமசங்கீர்த்தன பஜனைப் பாடல்களுக்கு மொழிகளைக் கடந்து நாடுகளின் எல்லைகளைக் கடந்து ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்தியாவின் பல பகுதிகளிலும் மலேசியா, இலங்கை போன்ற வெளி நாடுகளிலும் இவர்களின் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. மிருதங்கம் வாசிக்கும் சாய்ராம், மாத்மிகாவின் அண்ணன். இவர்களின் இசையில் அன்னமாச்சார்யா, புரந்தரதாசர், ராமதாசர் போன்ற பலரின் பாடல்களும் செவிக்கு விருந்தாகின்றன. கர்னாடக இசை, ஹிந்துஸ்தானி, நாமசங்கீர்த்தனம் சேர்ந்த புதிய பாணியைத் தங்களுக்கென உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் இந்தக் குழந்தைகள்.
`தானுஜயே கா… தானுஜயே கா…’ என்னும் உருதுப் பாடலாக இருந்தாலும் சரி, `கின்கின் தாரே லங்குதியராத்தா’ என்னும் பர்ரி நிஸாமியின் கஸலாக இருக்கட்டும், சாகர் ஸித்திக்கின் உருது கஸல்களாகட்டும் மாத்மிகாவின் குரல் அவ்வளவு உருக்கமாக ஒலிக்கிறது.
இவர்களின் இசை நிகழ்ச்சிகளைத் தென்னமெரிக்காவிலிருக்கும் பஞ்சாபியரான பால்ராஜும், வாகா எல்லையிலிருக்கும் குர்ரான் இம்தியாஸும் தங்களின் இணைய பக்கங்களில் பதிவிட்டிருக்கின்றனர். இதன் மூலம் மாத்மிகாவின் கவாலி, கஸலுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அமெரிக்காவிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
நாமசங்கீர்த்தனம் ஏன் சிறந்தது?இறைவனைவிட இறைவனின் நாமமே சிறந்தது என்பார்கள் அருளாளர்கள். அதனால்தான் இறைவனை உபாசனை செய்வதில் மிக உயர்ந்த மார்க்கமாக விளங்குகிறது நாமசங்கீர்த்தனம். ராமா, கிருஷ்ணா என்னும் நாமங்களே, தீமைகள் நம்மை அண்டாமல் தடுத்திடும் வல்லமை உடையது.
சாதுளரா மீரு ரண்டி பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=HgqtLxLr2xM
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT