Last Updated : 23 May, 2019 09:00 AM

 

Published : 23 May 2019 09:00 AM
Last Updated : 23 May 2019 09:00 AM

காற்றில் கீதங்கள் 22: விளையாட இது நேரமா?

மதுரை மணி அய்யரிடம் சங்கீதம் கற்றுக்கொண்டவர் டி.என்.பாலசுப்ரமணியன் (இசை உலகில் டி.என்.பாலா). இறைவன் உன்னிடம் என்னுடைய வினைப் பயனைக் கூறி, அதிலிருந்து என்னை விடுவிக்க உன்னிடம் கோரிக்கை வைக்கிறேன்.

நீயோ என் மீது பாராமுகமாய் இருக்கிறாயே.. என்ற வேதனையோடு முருகனை வேண்டும் தொனியில் அவர் எழுதிய பாடல் `விளையாட இது நேரமா முருகா’. இந்தப் பாடலை கர்னாடக இசை மேடைகளில் பட்டிதொட்டி எங்கும் பாடிப் பிரபலப்படுத்தியவர் மகாராஜபுரம் சந்தானம்.

மிருதங்கம், கஞ்சிரா போன்ற வாத்தியங்களை வாசிப்பதும் பாலாவுக்குக் கைவந்த கலை. சாகித்யங்களை எழுதும் திறமையும் பெற்றவர்.

கர்னாடக இசை துறையில் இவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைக்காக 1994-ம் ஆண்டில் கிளீவ்லேண்ட் தியாகராஜ உற்சவத்தில் இவர் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.

அமெரிக்க சாகித்யகர்த்தாக்கள் மன்றம் (American Composers Forum) என்னும் அமைப்பின் சார்பாக சிறந்த சாகித்யகர்த்தாவுக்கான விருதும் இவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர்-தமிழர் எனும் பெருமையும் டி.என்.பாலாவுக்கு உண்டு.

இந்த விருதை இவருக்குப் பெற்றுத் தந்தது, தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனையின் இசையை அடியொட்டி முருகனின் மீது இவர் பாடியிருக்கும் ‘முருக பஞ்சரத்னம்’ பாடல்களின் தொகுப்புதான். அப்படிப்பட்ட டி.என்.பாலா, முருகனின் அருளைப் பெற எழுதிய பாடல்தான் `விளையாட இது நேரமா?’.

முருகனைப் போற்றிப் பாடும் இந்தப் பாடலை ஷண்முகப்ரியா ராகத்திலேயே டி.என்.பாலா வெகு சிறப்பாக அமைத்திருப்பார். இந்தப் பாடலை சிறுவன் ஆகாஷ் கீபோர்டிலேயே பாடலுக்கான தாளக்கட்டை நிர்வகித்து அருமையாக இந்தக் காணொலியில் வாசித்திருக்கிறான்.

இசை அறிஞர் பி.வி.எஸ்.ஜெகதீசனிடம் கர்னாடக இசையை கீபோர்டில் வாசிக்கக் கற்றுக்கொண்டிருக்கும் ஆகாஷுக்கு பூர்விகம் மயிலாடுதுறை, குறுங்குளம். விளையாடத் துடிக்கும் பருவத்தில் இருக்கும் பாலகன் சிரத்தையோடு `விளையாட இது நேரமா’ வாசிக்கும் நேர்த்தியும் ராகத்தின் ஆதார ஸ்ருதியோடு முழு பாடலையும் அனுபவித்து வாசிக்கும் அழகையும் பார்த்தால் நீங்களும் பாராட்டுவீர்கள்.

`விளையாட இது நேரமா முருகா’ பாடலைக் காண

காற்றில் கீதங்கள் 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x