Published : 18 Apr 2019 12:56 PM
Last Updated : 18 Apr 2019 12:56 PM
சித்ரா பெளர்ணமியில் காலையிலும் மாலையில் பூஜைகள் செய்து வணங்கிவிட்டு, ஆலயங்களுக்குச் சென்று தரிசித்துவிட்டு, அப்படியே நிலாச்சோறு சாப்பிடும் வழக்கம்... இந்தநாளில் உண்டு. கடற்கரையிலும் ஆற்றங்கரையிலும் குளத்தங்கரையிலும் குடும்பமாக, உறவுகளுடன், அக்கம்பக்கத்தாருடன் சேர்ந்து சாப்பிடுவது ஐதீகம். நாளை 19.4.19 வெள்ளிக்கிழமை சித்ரா பெளர்ணமி.
சித்ரா பெளர்ணமி நன்னாளில், வீட்டில் பூஜைகள் மேற்கொள்ளவேண்டும். காலையும் மாலையும் மறக்காமல் பூஜிக்கவேண்டும். மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிபடுவது குடும்பத்துக்கு நன்மைகள் பலவற்றையும் வழங்கும்.
அதேபோல், கடற்கரைப் பகுதி, ஆற்றங்கரை, குளக்கரை ஆகிய இடங்களில், மாலையில் வீட்டில் பூஜித்துவிட்டு, கையில் உணவையெல்லாம் எடுத்துக்கொண்டு, குடும்பத்தாருடன், உறவினர்களுடன், அக்கம்பக்க நண்பர்களுடன் வந்து, வட்டமாக அமர்ந்துகொண்டு, நிலாச்சோறு சாப்பிடுவார்கள். அப்போது, கரைப்பகுதியில் இருந்துகொண்டு, அங்கே வெட்டவெளியில் இருந்துகொண்டு, நிலாவைப் பார்த்து பூஜித்து வழிபடுவார்கள். அதற்காக, பூஜை சாமான்களுடனும் உணவுகளுடனும் உறவினர்கள் சகிதமாக ஊர்வலமாக வருவார்கள்.
ஆனால் இந்தக் காலத்தில், ஆற்றங்கரைக்குச் செல்வதும் குளக்கரைக்குச் செல்வதும் குறைந்துவிட்டது. எனவே, வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்துகொண்டே, உணவு பரிமாறுகிறார்கள். பெளர்ணமியின் முழு நிலவு பிரகாசிக்கும் அற்புத வேளையில், அதன் கதிர்கள், நம் மீதும் இந்த பூமியின் மீதும் விழுந்து நல்ல அதிர்வுகளை உண்டாக்கும். இதனால்தான் சித்ரா பெளர்ணமி நாளில், வெட்டவெளியில் இருந்தபடி, நிலாச்சோறு சாப்பிடும் வழக்கமே வந்தது என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT