Last Updated : 18 Apr, 2019 10:38 AM

 

Published : 18 Apr 2019 10:38 AM
Last Updated : 18 Apr 2019 10:38 AM

சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்

மாதந்தோறும் பெளர்ணமியும் வரும். அமாவாசையும் வரும். அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை,  புரட்டாசி அமாவாசை மிகவும் உன்னதமாகப் போற்றப்படுகிறது. அதேபோல், பெளர்ணமியில், சித்ரா பெளர்ணமி  மிகவும் மகோன்னதமானது எனப் போற்றப்படுகிறது; கொண்டாடப்படுகிறது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

 சித்ரா பௌர்ணமி எனும் அற்புத நாளில், இந்திரன் மதுரையம்பதிக்கு வந்திருந்து, ஸ்ரீசொக்கநாதரை வழிபட்டான்; சாபம் நீங்கப் பெற்றான் என்கிறது மதுரையம்பதியின் ஸ்தல புராணம்.

  மதுரையின் பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருவிழாவும் சித்ரா பௌர்ணமியன்று தான் சிறப்புற நடைபெற்று நிறைவுறுகிறது.

   விழுப்புரம் அருகில்  கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் கூடிக் கொண்டாடி மகிழ்வதும் சித்ரா பௌர்ணமி நன்னாளில்தான்!  

    நாகை மாவட்டம் எட்டுக்குடி முருகன் கோயிலிலும் பட்டுக்கோட்டையை அடுத்த மஞ்சள்வயலில் அமைந்துள்ள முருகன் கோயிலிலும் சிறப்பாக  சித்திரை  பெளர்ணமி நன்னாளில்  காவடித் திருவிழாவும் அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடந்தேறும்.

     சித்ரா பௌர்ணமியன்று தஞ்சை பெரியகோயிலில்  - சித்தர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நந்தியம்பெருமானுக்கும் கருவூராருக்கும் அப்போது அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று ஜோதி வழிபாடும் அன்னதானமும் மிகச் சிறப்பாக நடைபெறும்.  

     தஞ்சாவூரில் கீழவாசலில் அமைந்துள்ளது உஜ்ஜைனி மாகாளியம்மன் கோயில். சித்ரா பௌர்ணமி நாளில், வருடந்தோறும் திருவிளக்கு பூஜையும், மாவிளக்கு வழிபாடும், பால்குடங்களுடன் ஸ்ரீகாளி புறப்பாடும், அம்பாள் வீதியுலாவும் என அந்த நாள் முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடபெறும்.

     சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையை கிரிவலமாக வந்து வணங்குவது மகா புண்ணியம். சிவனாரை வணங்கி வழிபடுவதற்கு வரும் தேவர்களின் அருளும் சித்தர்களின் ஆசியும் கூட அன்றையநாளில், கிரிவலம் வரும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x