Last Updated : 03 Mar, 2019 09:57 AM

 

Published : 03 Mar 2019 09:57 AM
Last Updated : 03 Mar 2019 09:57 AM

மகா சிவராத்திரி மகத்துவம்

அம்பிகைக்கு நவராத்திரி. அப்பன் சிவபெருமானுக்கு ஒரேராத்திரி... அது சிவராத்திரி. மாதந்தோறும் சிவராத்திரி உண்டு என்றாலும் மாசி மாதத்தில் வருவதே மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது.

இதோ... நாளைய தினம் 4.3.19 திங்கட்கிழமை மகா சிவராத்திரி. சிவபெருமானுக்கு உரிய நாள் என்று திங்கட்கிழமையைச் சொல்லுவார்கள். திங்கட்கிழமைக்கு சோமவாரம் என்று பெயர் உண்டு. எனவே சிவனாருக்கு உரிய திங்கட்கிழமையில், மகா சிவராத்திரி வருவது இன்னும் கூடுதல் சிறப்பு வாய்ந்தது என்று சொல்லி சிலாகிக்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

மகா சிவராத்திரி எதனால் கொண்டாடபடுகிறது? அன்றைய நாளில், இரவு முழுவதும் ஏன் கண் விழிக்க வேண்டும்? இரவு முழுவதும் ஏன் தீபங்கள் ஏற்ற வேண்டும்? அந்தநாளில், சிவசிந்தனையில் லயித்திருக்க வேண்டும் என்பதற்குக் காரணங்கள் பல உள்ளன.

இவை அனைத்துக்கும் பக்தி ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் புராண காரணங்களை மேற்கோள் காட்டி ஒருவிதமாகவும் மருத்துவ, வாழ்க்கைத் தத்துவங்களின் மூலமாகவும் தெளிவு கிடைக்கும் உதாரணங்கள் ஏராளம்.

சிவராத்திரி என்பது விழா அல்ல! இங்கே, கொண்டாட்டங்களுக்கும் திருவிழாக் குதூகலங்களுக்குமான விஷயங்களில்லை. மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம், மகா சிவராத்திரி விரதம். ஆகவே, மகா சிவராத்திரியைக் கொண்டாடுகிறோம் என்று சொல்லாதீர்கள். அனுஷ்டிப்பதாகச் சொல்லுங்கள் எனத் தெரிவிக்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

மகா சிவராத்திரி. இந்த நாளில் உபவாசம் இருக்கவேண்டும். அதாவது சாப்பிடாமல் விரதம் மேற்கொள்ளவேண்டும். கண்விழிக்க வேண்டும். உபவாசத்துடன், கண்விழித்து, ஈசனை நினைந்து உருகி, வழிபடவேண்டும்.

நாளை மகா சிவராத்திரி. இந்தநாளில் முடிந்தவரைக்கும் மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்வோம். முடிந்தவர்கள், விரதம் மேற்கொள்ளுங்கள். அருகில் உள்ள ஆலயங்களில் இரவில் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொள்வோம்.

ஏழ்பிறப்பின் பாவங்களும் தொலையும், மோட்ச கதி கிடைக்கும். சிவனாரின் திருவருளையும் திருவடியையும் அடையலாம். வாழையடி வாழையென வம்சம் தழைக்கும் என்கின்றன சிவாகம சாஸ்திரங்கள்.

மகா சிவராத்திரியில்... சிவனாரைத் தரிசிப்போம்! சிவனருளைப் பெறுவோம்!

ஓம் நமசிவாய!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x