Last Updated : 05 Mar, 2019 12:34 PM

 

Published : 05 Mar 2019 12:34 PM
Last Updated : 05 Mar 2019 12:34 PM

மாசி அமாவாசை தர்ப்பணம்; மறக்காதீங்க

மாசி அமாவாசை நாளைய தினம் (6.3.19 புதன்கிழமை). எனவே, அமாவாசை தர்ப்பணத்தை மறக்காமல் நிறைவேற்றுங்கள். முன்னோர் ஆராதனை செய்வது ரொம்பவே முக்கியம் என அறிவுறுத்துகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

அமாவாசை நாளில், முன்னோர்களை நினைத்து, அவர்களை வணங்குவதும், அவர்களை நினைத்து எவருக்கேனும் உணவுப் பொட்டலங்கள் வழங்குவதும் நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழச் செய்யும்; உயரச் செய்யும் என்பது ஐதீகம்.

அமாவாசை நாளில், முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கச் சொல்கிறது சாஸ்திரம். வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பிலும் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். அதேபோல், மாதந்தோறும் வருகிற அமாவாசை அன்று தர்ப்பணம் பித்ருக்கடனைத் தீர்க்கவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

6.3.19 புதன்கிழமை அமாவாசை. மாசி மாத அமாவாசை. ஆகவே, நாளைய தினம், தர்ப்பணம் செய்ய மறக்காதீர்கள். இறந்தவர்களின் புகைப்படத்துக்கு மாலை அணிவியுங்கள். அவருக்குப் பிடித்த உணவை, நைவேத்தியம் செய்யுங்கள். நம்மால் முடிந்த அளவு, ஒரு நாலு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்கலாம். அமாவாசை என்பது முன்னோருக்கு உரிய நாள். எனவே, இந்த நாளில், பித்ருக்களை நினைத்துச் செய்யும் எந்தத் தர்ம காரியங்களாக இருந்தாலும், அதில் மகிழ்ந்த முன்னோர்கள், நம் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்கள். இரட்டிப்புப் பலன்களை வழங்குவார்கள்.

தடைப்பட்ட பிள்ளை பாக்கியம், கிடைக்கப்பெறுவது உறுதி. வீட்டில் தரித்திரம் விலகி, ஐஸ்வரியம் பெருகும். நம் சந்ததி சிறந்து விளங்குவார்கள். அவர்களால், மொத்தப் பரம்பரைக்குமே மரியாதையும் கெளரவமும் கிடைத்து, சந்தோஷமும் நிறைவுமாக வாழலாம் என்பது உறுதி என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்!

நாளை 6ம் தேதி அமாவாசை தர்ப்பணம் செய்யவும் முன்னோர் வழிபாடு நடத்தவும் மறக்காதீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x