Published : 03 Mar 2019 09:34 AM
Last Updated : 03 Mar 2019 09:34 AM
மாசி மாதத்தின் ஞாயிறு பிரதோஷம் இன்று. எனவே மறக்காமல் சிவாலயம் சென்று சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேகத்தைத் தரிசித்து வேண்டுங்கள். நினைத்த காரியமெல்லாம் நடந்தேறும்.
ஒவ்வொரு பிரதோஷமும் விசேஷம்தான். பிரதோஷ நாளில், சிவாலயம் சென்று சிவ தரிசனம் செய்து மகா புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள்.
சனிக்கிழமை பிரதோஷம் சிறப்பு என்பது போல், சோம வாரம் எனப்படும் திங்களன்று வருகிற பிரதோஷம் மகத்துவம் வாய்ந்தது என்று சொல்லுவது போல், ஞாயிற்றுக் கிழமை அன்று வருகிற பிரதோஷமும் மகோன்னதமானது என்று போற்றுகிறார்கள் சிவாச்சார்யர்கள்.
பொதுவாகவே, பிரதோஷ நேரம் என்பது, மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக்கிழமை அன்று ராகுகாலம் இந்த நேரம்தான். அதாவது, மாலை 4.30 முதல் 6 மணி வரை அன்று, ராகுகாலம். எனவே ராகுகாலமும் பிரதோஷமும் ஒன்றாகி வருகிற ஞாயிற்றுக்கிழமையில் சிவதரிசனம் செய்வது ரொம்பவே நற்பலன்களைத் தரவல்லது என்கிறார்கள்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (3.3.19) பிரதோஷம். எனவே அருகில் உள்ள சிவாலயத்துக்கு மாலையில் செல்லுங்கள். பிரதோஷமும் ராகுகாலமும் கூடி வருகிற நேரத்தில், நந்திதேவருக்கும் சிவனாருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்டு தரிசியுங்கள்.
முடிந்தால் சிவபெருமானுக்கு வில்வமும் நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும் சார்த்துங்கள். அபிஷேகப் பொருட்கள் வழங்கி, பிரார்த்தனை செய்யுங்கள். நினைத்த காரியமெல்லாம் இனிதே நடந்தேறும். எடுத்த செயல்களில்லாம் வெற்றி கிடைக்கும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT