Last Updated : 19 Feb, 2019 07:23 AM

 

Published : 19 Feb 2019 07:23 AM
Last Updated : 19 Feb 2019 07:23 AM

மாசி செவ்வாய்; மாசி பெளர்ணமி; மாசி மகம்; மகா புண்ணிய நாளில் தானம் செய்யுங்கள்!

மாசி செவ்வாய், மாசி பெளர்ணமி, மாசி மகம் என மூன்றும் ஒரே நாளில் அமைந்திருக்கிறது. மகா புண்ணிய நாளான 19.2.19 செவ்வாய்க்கிழமை அன்று தானம் செய்யுங்கள். வீட்டின் தரித்திரம் விலகும்; ஐஸ்வரியம் பெருகும்!

மாசி மாதம் என்பதே மகத்துவம் மிக்கது. இந்த மாசி மாதத்தில், மாசி மகம், மாசி பெளர்ணமி, மாசி செவ்வாய் என்பதெல்லாம் விசேஷம் வாய்ந்தவை. அதாவது மாசி மாதத்தில், செவ்வாய்க்கிழமை சிறப்பு. மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் மகிமை கொண்டது. மாசி மாதத்தில் பெளர்ணமி சிறப்பு வாய்ந்தது.

இதில், மகம் மற்றும் பெளர்ணமி மாசியில் இணைவதுதான் மகோன்னதமான திருநாள். இந்த வருடம், மாசி மாதத்தில் மாசி செவ்வாய்க்கிழமை, மாசி மகம், மாசி பெளர்ணமி ஆகிய மூன்றும் இணைந்து வருவது இன்னும் இன்னும் மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நாளை 19.2.19 செவ்வாய்க்கிழமை, மாசி மகம். பெளர்ணமி. மூன்றும் இணைந்து வரும் முத்தான நாளில், தீர்த்த நீராடுங்கள். புண்ணிய நதிகள், தீர்த்தக்குளங்களில் நீராடுங்கள். காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றி வையுங்கள்.

அம்மன் கோயிலுக்குச் சென்று அம்பிகையைத் தரிசியுங்கள். முடிந்தால், குங்கும அர்ச்சனை செய்யுங்கள். அதேபோல், முருகன் கோயிலுக்குச் சென்று முருகக் கடவுளைத் தரிசித்து வணங்குங்கள். புண்ணியம் நிறைந்த நன்னாளி. இந்தப் பிறவிப்பயனை ஈடேற்றித் தரும் ஈசனை வணங்குங்கள்.

அருகில் உள்ள சிவாலயம் சென்று, சிவனார், அம்பாள், முருகப்பெருமான் முதலானோரைத் தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து விநியோகம் செய்யுங்கள்.

சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு, இயலாதவர்களுக்கு, முதியவர்களுக்கு, போர்வை, ஆடை தானம் வழங்குங்கள். முடிந்த அளவு ஐந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். வீட்டின் தரித்திர நிலை விலகும். ஐஸ்வர்யம் பெருகும். உத்தியோகத்தில் உயர்வும் குழந்தைகளின் கல்வியில் மேன்மையும் பெற்று இனிதே வாழலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x