Last Updated : 13 Jan, 2019 10:48 AM

 

Published : 13 Jan 2019 10:48 AM
Last Updated : 13 Jan 2019 10:48 AM

தை பிறக்குது; வழியும் பிறக்குது!

பொங்கல் ஸ்பெஷல்

போகி பண்டிகை என்பது மார்கழியின் கடைசிநாள். மறுநாள் தை பிறப்பு. தை மாதத்தின் பிறந்தநாள். அதுவே பொங்கல் திருநாள்.

உழவுத் தொழிலின் மேன்மையை உணர்த்துகிற அற்புதமான பண்டிகை.  தை மாதம் தொடங்கும் வேளையில், அறுவடை முடிந்திருக்கும். விளைந்த பொருட்களைக் கொண்டு,  எல்லா உயிர்களும் வாழ அருள்புரியும் கண்கண்ட தெய்வமான, கண்ணுக்குத் தெரியும் இறைசக்தியான சூரியனை வழிபடுவதே பொங்கலின்  தாத்பரியம்!

 இந்தநாளில், காலையில் எழுந்ததும் நீராடி, பொங்கல் வைக்க வேண்டும். பொங்கல் அன்று தலைக்குக் குளிக்க வேண்டும். புது பொங்கல் பானையைக் கிழக்குப் பக்கமாக வைத்து, அதில் கிழங்குகளுடன் கூடிய மஞ்சள் இலை, இஞ்சி இலை ஆகியவற்றைக் கட்டி, பொங்கல் பானையில் ஈரமான அரிசி மாவினால் சூரிய- சந்திர வடிவங்களை வரைய வேண்டும். சிலர் அடுப்பைக் கூடப் புதிதாக வைப்பார்கள்.

 பொங்கல் பொங்கி வழியும் போது, ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூவுவார்கள். நைவேத்தியப் பொருட்களை வைத்து சூரிய பூஜை செய்ய வேண்டும். முன்னதாக, பிள்ளையாரப்பனை வணங்கிவிட்டு, சூரிய பூஜை செய்யவேண்டும். பூஜை செய்யும் இடத்தில், திறந்த வெளியில், அரிசி மாவால் கோலமிட்டு, கோலத்துக்கு வடக்குப் பக்கம் சூரியனையும், தெற்குப் பக்கம் சந்திரனையும் வரைந்து பூஜை செய்ய வேண்டும்.

 தலைவாழை இலையில், சமைத்தவற்றை பிசைந்து, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் போடும் வழக்கமும் உண்டு. அப்போதும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று குரல் கொடுத்து வணங்குவார்கள். வது உத்தமம்! முக்கியமான விஷயம்... பொங்கல் அன்று - பொங்கல் செய்த பானை அல்லது பாத்திரத்தை காலி செய்யக் கூடாது என்பது ஐதீகம் என்று விவரிக்கிறார்கள்  ஆச்சார்யப் பெருமக்கள்!

வழிபாட்டை செவ்வனே மேற்கொண்டு பிரார்த்தனை செய்வோம். குடும்பத்துடன் செய்யும் வேண்டுதலுக்கு மகத்தான வலிமை உண்டு. தை பிறந்துவிட்டது. நம் வாழ்க்கைக்கான வழியும் பிறக்கப்போவது உறுதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x