Last Updated : 11 Oct, 2018 10:06 AM

1  

Published : 11 Oct 2018 10:06 AM
Last Updated : 11 Oct 2018 10:06 AM

சிருங்கேரி சாரதா பீடத்துக்கு ஒரு சிறப்பிதழ்

இந்தியாவின் சமய வரலாற்றில் முக்கியமான இடம் சாரதா பீடமாகும். துங்கபத்ரா நதியின் கரையில் பசுமை போர்த்திய குன்றுகளின் மேல் ஆதிசங்கரர் நடந்துபோய் பீடத்தையும் சாரதாம்பாள் ஆலயத்தையும் அமைத்ததாக வரலாறு கூறுகிறது. ஆதிசங்கரர் தொகுத்த அத்வைத வேதாந்தம் இன்றும் உயிர்ப்புடன் திகழும் உருவகமாக இருக்கும் சாரதா பீடம் குறித்த சிறப்பு மலரை ‘தி இந்து குரூப் பப்ளிகேஷன்ஸ்’, ‘Sri Sharada Peetam: Fostering a Timeless Philosophy’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

அத்வைத வேதாந்தம் குறித்த ஆழமான அறிமுகம், ஸ்மார்த்த மரபுக்கும் அதற்கும் இடையிலான தொடர்பு, சாரதா பீடம் சார்பில் வேதங்களையும் சமஸ்கிருதத்தையும் வெகுமக்களிடையே பரப்புவதற்காக செய்யப்படும் முயற்சிகள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சாரதா பீடத்தின் 36-வது ஜகத்குருவான பாரதி தீர்த்த மகாஸ்வாமிஜியின் பிரத்யேக நேர்காணலும் இதில் இடம்பெற்றுள்ளது.

சாரதா பீடம் சேகரித்து வைத்திருக்கும் புராதன ஆவணங்களிலிருந்து பண்டைய இந்தியாவின் சமய வாழ்க்கையின் மீதும் ஒளிபாய்ச்சும் சிறப்பிதழாக இந்த மலர் உள்ளது. ‘தி இந்து’வின் புகைப்பட ஆவணத் தொகுப்பிலிருந்து அற்புதமான கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களும், இந்த மலருக்காகவே எடுக்கப்பட்ட படங்களும் இந்த இதழுக்கு வண்ணம் சேர்க்கின்றன.

ஆதி சங்கரர் வாழ்ந்த காலகட்டம் குறித்து இன்னும் தெளிவின்மை இருக்கும் சூழ்நிலையில் அவர் வாழ்ந்த காலம் கி.பி. 700-750 ஆக இருக்கலாம் என்கிறார் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் இந்தியத் தத்துவப் பேராசிரியர் செங்காகு மயேடா. சங்கரர் குறித்து கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புகளை வைத்து எழுதப்பட்ட இக்கட்டுரையில் அவர் கனகதாரா ஸ்தோத்திரத்தை எழுதியதாகக் கூறப்படும் ஸ்வர்ணத்து மனா இல்லத்தின் இன்றைய புகைப்படமும் ஆதி சங்கரரின் தாயார் ஆர்யாம்பாவின் சமாதியும் ஆதிசங்கரர் என்ற வரலாற்று மனிதர் குறித்த நினைவுகளை மீட்டுவதாக உள்ளன.

காலத்தை வென்று நிற்கும் அத்வைத வேதாந்தத்தின் அடையாளமாக நிற்கும் சிருங்கேரி சாரதா பீடத்துக்கும் ஆதிசங்கரருக்கும் செய்யப்பட்ட மரியாதையாக இந்த மலர் திகழ்கிறது.SRI SRINGERI SHARADA PEETAM

FOSTERING A TIMELESS PHILOSOPHY

தி இந்து குரூப் பப்ளிகேஷன்ஸ்

850-860, அண்ணா சாலை,

சென்னை 600 002

விலை : ரூ. 250/-

தபால் வழியாக காசோலை அனுப்பிப் பெறலாம். THG Publishing Private Limited என்ற பெயரில் ரூ. 285/-க்கு காசோலை அனுப்பிப் பெறலாம். தபால் செலவு ரூ. 35/-

இணைய வழியில் வாங்க: www.thehindu.com/publications

மொத்தமாகப் பிரதிகள் வாங்க tobookstore@thehindu.co.in-க்கு மின்னஞ்சல் செய்யவும். மேலும் விவரங்களுக்கு 1800 3000 1878

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x