Published : 04 Jul 2018 05:11 PM
Last Updated : 04 Jul 2018 05:11 PM
ஜெ
ன் குரு ஹோடி ஒரு கிராமத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அவரது தோள்களில் பொம்மைகள், இனிப்புகள் கொண்ட பெரிய பையைச் சுமந்து சென்றார்.
“ஹோடி அவர்களே. உங்களை நாங்கள் ஒரு ஜென் குரு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் குழந்தைகளுக்கு பொம்மைகளையும் இனிப்புகளையும் கொடுத்து ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? நீங்கள் உண்மையிலேயே ஜென் குரு என்றால் எங்களுக்கு ஜென் என்றால் என்னவென்று காட்டுங்கள்.” என்று அந்த கிராமத்திலுள்ளவர்கள் கேட்டார்கள்.
ஹோடி உடனடியாக தனது பையை தரையில் போட்டார். அதைப் பார்த்தவர்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. “அதனால் என்ன?” என்று கேட்டார்கள்.
“உங்கள் சுமையை கீழே போட்டு விட்டால், அவ்வளவுதான்.” என்றார் ஹோடி.
அடுத்த நிலை என்னவென்று கிராமத்தவர் கேட்டனர்.
ஹோட்டி, தனது பையை மீண்டும் தோள்களில் போட்டுக்கொண்டு நடக்கத் தொடங்கினார்.
“இதுதான் அடுத்தபடி. தற்போது எதையும் நான் சுமக்கவில்லை. இந்தச் சுமை என்னுடையதல்ல என்று எனக்கு இப்போது தெரியும். இந்தச் சுமை முழுவதும் குழந்தைகள் விளையாடுவதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சிக்கும் உதவும் பொம்மைகள், இனிப்புகளாக மாறிவிட்டன.”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT