Published : 14 Jan 2025 06:54 PM
Last Updated : 14 Jan 2025 06:54 PM
சபரிமலை: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியை முன்னிட்டு ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். அப்போது விண்ணை முட்டும் அளவுக்கு ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என சரண கோஷமிட்டனர்.
சபரிமலையில் இன்று (ஜன.14) மகர ஜோதியை முன்னிட்டு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா என பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜோதி வடிவில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க பக்தர்கள் திரளானோர் குவிந்தனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
கார்த்திகை மாதம் துவங்கியவுடன் சபரிமலை செல்ல பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சுவாமியை தரிசிப்பார்கள். சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகர ஜோதி ஆந்தோறும் தை மாதம் முதல் தேதி நடைபெறும். மகர ஜோதியை முன்னிட்டு ஜோதி வடிவில் ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகர ஜோதி தினத்தன்று மாலை நேரத்தின் போது ஐயப்ப சுவாமி சிறப்பு அலங்காரமான பந்தளம் மன்னர் வழங்கிய திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதன்படி இன்று மாலை 6.42 மணி அளவில் சன்னிதான கதவுகள் திறக்கப்பட்டது. அடுத்த சில நொடிகளில் பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி அளித்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் பக்தர்கள் ராஜ அலங்காரத்தில் உள்ள ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment