Published : 16 Dec 2024 03:25 AM
Last Updated : 16 Dec 2024 03:25 AM

திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன.10 முதல் சொர்க்க வாசல் தரிசனம்: சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து

திருமலை: வை​குண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை திருமலையில் சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்​யப்​பட்​டுள்ள​ன.

வைகுண்ட ஏகாதசி​யை யொட்டி திருப்பதி ஏழுமலை​யான் கோயி​லில் சொர்க்க வாசல் தரிசனத்​துக்கான ஏற்பாடுகள் செய்​யப்​பட்டு வருகின்றன. இதற் காக விரை​வில் தரிசன டோக்​கன் களை திருப்பதி தேவஸ்​தானம் வெளியிட உள்ளது.இதற்கான சில நிபந்​தனைகளை திருப்பதி தேவஸ்​தானம் வெளி​யிட்​டு உள்​ளது.

சொர்க்க வாசல் தரிசனத்​துக்கு, தரிசன டோக்​கன்களை பெற்றுள்ள பக்தர்கள் மட்டுமே அனும​திக்​கப்​படு​வர். சாமானிய பக்தர்​களுக்கு முன்னுரிமை வழங்​கும் விதமாக முதி​யோர், கைக்​குழந்தை​களுடன் வரும் பெற்​றோர், மாற்று திறனாளி​கள், ராணுவ வீரர்​கள், வெளி​நாடு வாழ் இந்தி​யர்​களுக்கான சிறப்பு தரிசனங்கள் அனைத்​தும் ரத்து செய்​யப்​படு​கின்றன.

மேலும், ரூ.300 சிறப்பு தரிசன​மும் இருக்​காது. அனைத்து பக்தர்​களும் வெறும் சர்வ தரிசனம் மூலமாக மட்டுமே ஏழுமலை​யானை தரிசிக்க இயலும். டோக்​கன்​களில் குறிப்​பிட்ட நேரத்​தில் மட்டுமே திரு​மலைக்கு பக்தர்கள் வர வேண்​டும். அப்படி வந்தால் மட்டுமே காத்​திருக்​கும் நேரமும் குறை​யும். முன்​னாள் தேவஸ்தான அறங்​காவலர்​கள், எம்.பி., எம்.எல்​.ஏக்கள் மற்றும் மக்கள் பிரதி​நி​திகள் யாரும் வைகுண்ட ஏகாதசி தரிசனத்​துக்கு அனும​திக்​கப்பட மாட்​டார்​கள்.

மேலும், ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனங்​களும் முழு​மையாக ரத்து செய்​யப்​படு​கிறது. வைகுண்ட ஏகாதசிக்காக 10 நாட்கள் வரை 3000 ஸ்ரீ வாரி தன்னார்வ தொண்டு சேவகர்கள் வரிசை​யில் காத்​திருக்​கும் பக்​தர்​களுக்கு சேவை செய்ய நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளனர் என்று ​திருமலை ​திருப்​பதி தேவஸ்​தானம் தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x