Published : 13 Dec 2024 12:37 AM
Last Updated : 13 Dec 2024 12:37 AM

இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை உச்சியில் மகா தீப தரிசனம்

​திருவண்ணாமலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மகா தீப கொப்​பரை.

திரு​வண்ணாமலை: கார்த்திகை தீபத் திரு​விழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள திரு​வண்ணாமலை உச்சி​யில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்​பட​வுள்​ளது.

திரு​வண்ணாமலை அண்ணா​மலை​யார் கோயி​லில் ஆண்டு​தோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திரு​விழா உலக பிரசித்திப் பெற்​றது. நடப்​பாண்டு திரு​விழா கடந்த 1-ம் தேதி துர்க்கை அம்மன் உற்சவம் மற்றும் கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் உற்சவம், 63 நாயன்​மார்கள் வீதி​யுலா, வெள்​ளித் தேரோட்​டம், பல்வேறு வாகனங்​களில் பஞ்சமூர்த்திகள் வீதி​யுலா, மகா தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்​சிகள் நடைபெற்றன.

முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திரு​விழா இன்று நடைபெறவுள்​ளது. அண்ணா​மலை​யார் கோயில் மூலவர் சந்நி​தி​யில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்​பட்​டது. அண்ணா​மலை​யார் கோயி​லில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்​தில் தீர்த்​தவாரி நடைபெறுகிறது. தொடர்ந்து, தங்க கொடிமரம் முன்​புள்ள தீப தரிசன மண்டபத்​தில் விநாயகர், முரு​கர், அண்ணா​மலை​யார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்​வரர் (உற்​சவர்​கள்) ஆகியோர் மாலை 4 மணியள​வில் எழுந்​தருள்​கின்​றனர். மாலை 5.57 மணிக்கு சுவாமி அர்த்​தநாரீஸ்​வரராக காட்​சி​யளிக்​கிறார்.

தொடர்ந்து, தங்க கொடிமரம் முன்​புள்ள அகண்​டத்​தில் தீபச் சுடர் ஏற்றப்​பட்​டதும், ‘மலையே மகேசன்’ எனப் போற்​றப்​படும் 2,668 அடி உயரமுள்ள திரு​வண்ணாமலை உச்சி​யில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்​படும். தொடர்ந்து, கோயி​லில் உள்ள நவ கோபுரங்கள் உட்பட திரு​வண்ணாமலை மாநகரம் முழு​வதும் அகல் விளக்​கேற்றி பக்தர்கள் வழிபடு​வர். விரதம் இருக்​கும் பக்தர்கள் தேனும்​-​தினை​மா​வும் உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்​வார்கள்.

11 நாட்​களுக்கு தீப தரிசனம்: மோட்ச தீபம் எனப்​படும் மகாதீபத்தை 11 நாட்​களுக்கு பக்தர்கள் தரிசிக்​கலாம். பருவதராஜ குல சமூகத்​தினர் தீபத்தை ஏற்றுவர். மகா தீபத்​துக்காக 4,500 கிலோ நெய், 1,500 மீட்டர் காடா துணி​யில் செய்​யப்​பட்ட திரி ஆகியவை பயன்​படுத்​தப்​பட​உள்ளன.

மகா தீபம் ஏற்றப்​படும்​போது மூலவர் சந்நிதி அடைக்​கப்​படும். தொடர்ந்து தங்க ரிஷப வாகனங்​களில் பஞ்சமூர்த்திகள் பவனி உலா நடைபெறும். ஐயங்​குளத்​தில் தெப்ப உற்சவம் 3 நாட்​களுக்கு நடைபெறும். தீபத் திரு​விழாவை தொடர்ந்து பவுர்ணமி மற்றும் விடுமுறை நாட்கள் வருவ​தால் 3 நாட்களுக்கு ஏறத்தாழ 40 லட்சம் பக்தர்கள் கிரிவல யாத்​திரை மேற்​கொள்வர் எனத் தெரி​கிறது. இதற்காக மாவட்ட நிர்​வாகம், காவல் துறை சார்​பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்​யப்​பட்​டுள்ளன.

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை​யால் மகா தீபம் ஏற்றப்​படும் மலையில் பல்வேறு இடங்​களில் நிலச்​சரிவு ஏற்பட்​டுள்​ளது. எனவே, மலையேறிச் சென்று மகா தீபத்தை தரிசிக்க பக்​தர்​களுக்கு தடை ​வி​திக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x