Last Updated : 12 Dec, 2024 06:27 PM

 

Published : 12 Dec 2024 06:27 PM
Last Updated : 12 Dec 2024 06:27 PM

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். மாசாணியம்மன் சயன கோலத்தில் காட்சி அளிப்பதால் இங்கு வைக்கும் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக பக்தர்களுக்கு நம்பிக்கை உள்ளது.

மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2010 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி நடைபெற்றது. தற்போது 14 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்காக கோயில் புனரமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு பணிகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 6 ம்தேதி மங்கள வாத்தியங்கள், வேதபாரண்யம், திருமுறை பாராயணம் நடைபெற்றது. 7 -ம்தேதி மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. 8ம் தேதி வாஸ்து சாந்தி நடைபெற்றது.

9-ம் தேதி யாகசாலை அலங்காரம், முதற்கால யாக பூஜை நடைபெற்றது. 10-ம்தேதி இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. நேற்று நான்காம் கால யாக பூஜை, ஐந்தாம் கால யாக பூஜை நடைபெற்றது. இன்று காலை 7.35 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு மாசாணியம்மன் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், 9.30 மணிக்கு மாசாணியம்மன் மூலாய கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

கும்பாபிஷேக நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி, சேகர் பாபு, பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி, வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், சூலூர் எம்எல்ஏ கந்தசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்றனர். டிரோன் மூலம் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக பணிகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x