Last Updated : 24 May, 2018 10:40 AM

 

Published : 24 May 2018 10:40 AM
Last Updated : 24 May 2018 10:40 AM

தீர்த்த மகிமை விருட்ச மகிமை 03: வாகையை வலம் வருவோம்!

பெரும்பாலும் சிவனும் அம்பிகையும் உடனுறை ஆலயங்களின் விருட்சமாக இருக்கும் பேறு பெற்றது வாகை மரம். எதிரிகளைப் போரில் வெல்லும் அரசன் சூடிய மாலைகளில் வாகைப் பூக்களே இருந்ததாகச் சங்ககாலத் தமிழ்ப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. நாகப்பட்டினத்துக்கு அருகில் இருக்கும் திருவாழப்புத்தூர் ரத்னபுரீஸ்வரர் ஆலயத்தின் தல விருட்சமாக இருப்பது வாகை மரம். பஞ்சத்தைப் போக்கி மழையைப் பொழிந்து, தானியங்கள், ரத்தினங்கள் ஆகியவற்றைத் அருளியதால் இறைவனுக்கு ஸ்ரீரத்தினபுரீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்ததாகக் கூறுகின்றனர்.

வண்டமர் பூங்குழல்நாயகி உடனுறை மாணிக்கவண்ணர் அருளும் இந்த ஆலயத்தில் இருக்கும் வாகை மரத்தை தொட்டு வலம் வர, மூச்சு சார்ந்த நோய்ப் பிரச்சினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. துர்க்கையை சாந்த சொரூபியாக இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம். துர்கா பரமேஸ்வரி அசுரனை அழித்து வெற்றி பெற்றதன் அடையாளமாக வாகை இந்த ஆலயத்தின் தலவிருட்சமாகக் கொண்டாடப்படுகிறது.

வாகை மரத்தின் வேர், பட்டை, இலைகள், பூ எனப் பலவும் மருத்துவப் பயன் மிக்கவையாக மதிக்கப்படுகின்றன. விஷ முறிவு மருந்துகளுக்கும் வீக்கங்களுக்கும் வாகை இலையைப் பயன்படுத்துவோர் உண்டு. வாகை மரத்தை வலம் வந்தாலே உடற்சூடு, பித்தம், பெண்களுக்கு வரும் மாதவிடாய் சார்ந்த நோய்கள் மறையும் என்னும் நம்பிக்கையும் பக்தர்களிடம் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x