Published : 06 Nov 2024 12:15 AM
Last Updated : 06 Nov 2024 12:15 AM
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற உள்ள கந்தசஷ்டி விழாவில் பக்தர்களுக்கு உதவும் வகையில் க்யூஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ. 7) நடைபெறுகிறது. வரும் 8-ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
இதையொட்டி, காவல் உதவி மையங்கள், முதலுதவி நிலையங்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள், கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றுப் பாதைகள் / வழித்தடங்கள் தொடர்பான அத்தியாவசிய தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எளிதாக இணையதளத்தில் அறிந்து கொள்ளும் வகையில் க்யூஆர் கோடு மற்றும் லிங்க் வசதியை தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, https://bit.ly/E-Support-Hub_Skanda-Sashti-2024 என்ற லிங்க் அல்லது க்யூஆர் கோடு மூலம் இணையதள பக்கத்துக்குச் சென்று, அத்தியாவசியத் தகவல்களைக் பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT